திருச்சி பயோகிராபி

தமிழகத்தின் இதயம் :
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம், திருச்சிராப் பள்ளி. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரம். சென்னைக்குத் தெற்கில் 336 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரிக்கு வடக்கில் 403 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. காவிரியின் டெல்டா பகுதிகள், திருச்சி மாவட்டத்திலிருந்தே தொடங்குகின்றன.
எல்லையில்லா எல்லை :

தமிழகத்திலேயே அதிக மாவட்டங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொண்டிருப்பது, திருச்சி மாவட்டம்தான். திருச்சியைச் சுற்றி 10 மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன. அவை, நாமக்கல், பெரம்பலூர், அரிய லூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங் கை, மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர்.

இனிய இருப்பிடம் :

சேர்வராயன் மலை, பழநி மலை மற்றும் குன்றுகள் சூழ்ந்த சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுக்க முழுக்க சாகுபடி வயல்களால் சூழப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.
திட்டமிட்டதும் திட்டமிடாததும் :
திருச்சி நகரத்தின் மையப் பகுதியான மலைக்கோட்டைப் பகுதி, திட்டமிடாமல் உருவாக்கப்பட்டது. புதிதாக வளரும் புறநகர்ப் பகுதிகள், திட்டமிட்டு உருவாக் கப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கம் பகுதியின் பல வீடுகள், சிற்ப சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்டிருக்கின்றன.
ரேங்க் :
தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் 52-வது இடத்தில் உள்ளது. திருச்சி மாநகரப் பகுதியின் மக்கள்தொகை மட்டுமே 8.5 லட்சம் பேர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மக்கள்தொகை 27,22,290. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, சமண மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
திருச்சியின் இருப்பிடம் :
திருச்சியின் தரைப்பகுதி பெரும்பாலும் சமவெளியாகவே இருக்கிறது. சில இடங்களில் அங்கொன்றும், இங்கொன் றுமாகக் குன்றுகள் காணப்படுகின்றன. இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றுதான் திருச்சி மலைக்கோட்டை.
