திருச்சி – நிர்வாகம்

0
1

நகர நிர்வாகம் :
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி யில் 65 வார்டுகள் உள்ளன. அபிஷேக புரம், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால், சாலைகள் பராமரிப்பு, தெரு விளக்குகள், சுகாதாரம் பேணுதல், குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை எளிதாகச் செய்ய முடிகிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், துவாக்குடி ஆகியவை நகராட்சிகள்.

உள்ளாட்சி :

2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களும் 16 பேரூராட்சிகளும் உள்ளன. திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தைய ங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம் ஆகியவை ஊராட்சி ஒன்றியங்கள். பால கிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், முசிறி, எஸ். கண்ணணூர், சிறுகனூர், தாத்தையங்கார்ப்பேட்டை, தொட்டி யம், உப்பிலியாபுரம் ஆகியவை பேரூராட்சிகள்.

வட்டங்களும் கோட்டங்களும் :
திருச்சி, லால்குடி, முசிறி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும், திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய 7 வட்டங்களும் உள்ளன.

3

Leave A Reply

Your email address will not be published.