திருச்சியில் உள்ள சாலைகள்

0
1 full

சாலை வழிப் பயணங்கள் :

தமிழக அரசின் மாநில போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டப் பேருந்துகள், திருச்சி மாவட்டத்தில் அதிக அளவு இயக்கப்படுகின்றன. திருச்சியில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன.

சாலையோரச் சோலை :

2 full

திருச்சிராப்பள்ளி, பல தேசிய நெடுஞ்சாலைகளின் மையமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 45, எப்போதும் பரபரப்பாகவும் நெரிசலாகவும் காணப்படும். சென்னை – திருச்சி மார்க்கத்தில் ஒரு நாள் இரவில் மட்டும் 10,000 லாரிகள் பயணிக்கின்றன. திருச்சியைக் கடந்துசெல்லும் பிற தேசிய நெடுஞ்சாலைகள், எண். எச்.67, 45 பி, 210 மற்றும் 227.

நீளும் சாலைகள் :

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கிட்டத்தட்ட 715 கிலோமீட்டர் நீள சாலையைப் பராமரிக்கிறது. நகரில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4 லட்சம் இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. ஒரு லட்சம் கார்களும், 15,000 சரக்கு போக்குவரத்து வாகனங்களும் இயங்குகின்றன. தவிர, ஒரு நாளைக்கு 2,000 இன்டர்-சிட்டி பேருந்துகள் திருச்சி மார்க்கமாக இயங்குகின்றன.

3 half

Leave A Reply

Your email address will not be published.