
திருச்சி நகரத்துக்கு அருகில் இருக்கக்கூடிய சிறிய ஊர், காஜாமலை. அருகில் உள்ள குன்றின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது.

பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த சூஃபி முஸ்லிம் துறவி. காஜா சையத் அகமது ஷா அவுலியா இம்மலையிலிருந்து உபதேசங்கள் வழங்கியதால், காஜா மலை என்ற பெயர் வந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் இங்குசெயல்படுகிறது.
