உண்மைக் கதை பாகம் 4 : மாநிலப் போட்டியில் தங்கம் வென்று வந்தேன்.

0
1

உண்மைக் கதை பாகம் 4 : மாநிலப் போட்டியில் தங்கம் வென்று வந்தேன்.

உண்மைக் கதையை உங்களிடம் கொண்டு செல்லும் எங்களுடைய முயற்சி இந்த வாரமும் தொடர்கிறது. சாமானியனாக பல இன்னல்களை அனுபவித்து வாழ்வில் வெற்றி கண்ட ஒரு சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சியே இது.

பயங்கர வயிற்று வலி ஏற்பட்டது, ஐயோ அம்மா என்று கத்த இரவு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார் விடுதி அதிகாரி. மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள். வயிற்றுக் குடல் பகுதியில் கல் உள்ளதால் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று கூற. நம்முடைய கதையின் கதாநாயகனுக்கு மருத்துவமனையில் அப்ரண்டிஸ் ஆப்ரேஷன் நடைபெறுகிறது. இப்படியாக பத்து நாட்கள் மருத்துவமனையில் தங்கி, பிறகு டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் விடுதிக்கு செல்கிறேன்.

2


பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் முன்னேற்றம் அடைவதை நானே உணர்ந்து. ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்க எனக்கு உள்ள ஆர்வத்தை உடற்கல்வி ஆசிரியர் ரிச்சர்ட் இடம் வெளிப்படுத்தினேன். ஆனால் அவரோ உனக்கு இப்பொழுது தான் ஆபரேஷன் முடிந்து இருக்கிறது அதனால் உன்னை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட. அன்று முழுக்க மன வருத்தத்துடன் சுற்றி திரிந்தேன். பிறகு அடுத்த நாளும் உடற்கல்வி ஆசிரியர் ரிச்சர்ட் சந்தித்து என்னையும் போட்டிக் அனுமதியுங்கள் என்று கூறினேன். மீண்டும் அவர் மறுத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரை சந்தித்து, தயவு செய்து என்னை அனுமதியுங்கள் நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று கூறினேன். தற்போது தான் உனக்கு ஆபரேஷன் முடிந்து இருக்கிறது ஓட தொடங்கினால் மீண்டும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறி மறுத்துவிட்டார் உடற்கல்வி ஆசிரியர் ரிச்சர்ட். ஆனால் நானோ அவரை விடவில்லை. தொடர்ந்து கெஞ்சிக் கேட்ட தன் அடிப்படையில் என்னை போட்டியில் பங்கேற்க அனுமதித்தார் உடற்கல்வி ஆசிரியர்.
போட்டியில் யார் முதலிடம் பெறுகிறார்களோ அவருக்கு நாள்னா வெற்றி தொகையாக தரப்படும் என்று அறிவிக்கிறார் உடற்கல்வி ஆசிரியர் ரிச்சர்ட். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு போட்டியில் ஓடத் தொடங்கினோம். அனைவரையும் முந்திக்கொண்டு நான் வெற்றிபெற அந்த நாள்னா எனக்கு சொந்தமானது. வாழ்நாளில் முதல் முறையாக ஒரு வெற்றி. தினம் தினம் தோல்விகளையும் காயங்களையும் சம்பாதித்த எனக்கு முதல் பரிசு.

அந்த முதல் வெற்றி தான் என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான பரிணாமம். அந்த நாள்னாவை செலவு செய்யாது. தினமும் நாணயத்தைப் பார்த்து பார்த்து என்னை நானே ஊக்குவித்துகொள்வேன். பிறகு உடற்கல்வி ஆசிரியர் எனக்கு தினமும் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார் காலையில் விரைவாக எழுந்து விளையாட்டு மைதானத்திற்கு வந்து விடுவேன். காலை 8 மணி வரை பயிற்சி மேற்கொள்வேன் பிறகு பள்ளிக்கு தயாராகி சென்று விடுவேன். பள்ளி முடிந்து மாலை மீண்டும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்வேன்.

இப்படி எனக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு உடற்கல்வி ஆசிரியர். பள்ளி அளவிலான போட்டிக்கு என்னை தேர்வு செய்த அனுப்புகிறார். அந்தப் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுகிறேன். போட்டியில் என்னுடைய வேகத்தைப் பார்த்து மாநில அளவிலான போட்டி இருக்கு, அதற்கு நீ செல்ல வேண்டும் என்று கூறி கடுமையாக பயிற்சி அளிக்கிறார் என்னுடைய பயிற்சியாளர்.
அப்பொழுது எனக்கு வேலையே பள்ளிக்கு செல்வது பிறகு மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்வது இரண்டு வேலை மட்டும் தான். தினமும் எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக பயிற்சியை மேற்கொண்டேன். அப்பொழுது தான் மாவட்ட அளவிலான போட்டிக்கு அழைப்பு எங்கள் பள்ளிக்கு வந்தது. என்னுடைய பயிற்சியாளர் முதலாவதாக என்னுடைய பெயரை உச்சரிக்கிறார். ஓடிச்சென்று உடற்கல்வி ஆசிரியரை பார்த்தேன். மாவட்ட அளவிலான போட்டிக்கு என்னை செல்லவேண்டும் என்று கூற, உடனடியாக போட்டிக்கு தயாராகி, போட்டியில் பங்கேற்றேன் அங்கு முதலிடம்.

வெற்றி பெற்று கோப்பையுடன் பள்ளிக்கு திரும்பும் போது அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். இது எனக்கு மேலும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. இவ்வளவு நாளாக ஒரு அடையாளமும் இல்லாமல் வாழ்வு போன போக்கில் சென்று கொண்டிருந்த எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது இந்த விளையாட்டு.

ஓவியம்: ரமேஷ்

இனி விளையாட்டு தான் வாழ்க்கை என்று எண்ணி பள்ளிக்கு வரும் விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டு, அனைத்து போட்டிக்கும் செல்வேன். அப்பொழுது ஒரு நாள் மண்டல அளவிலான போட்டிக்கான அழைப்பு வந்தது. பள்ளி நிர்வாகம் என் பெயரை உச்சரிக்க மனமகிழ்ச்சியோடு மண்டல அளவிலான போட்டிக்கு சென்றேன். நடைபெற்ற மூன்று சுற்றுகளிலும் முதலிடம் பிடித்தேன். அவ்வளவு பெரிய மைதானத்தில் எனக்குப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. மேலும் அன்னை சத்யா மைதானம் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது. அப்போதெல்லாம் போட்டிகளில் கால் சூ அணியாமல் ஓடுவதைப் பார்த்த என்னுடைய உடற்கல்வி ஆசிரியர் ரோட்டரி சங்கத்தின் அணுகி எனக்கு காலுக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார்
பிறகு விளையாட்டுப் போட்டி என்றாலே நான்தான் என்று சொல்லுமளவிற்கு பள்ளி எங்கும் என் பெயர் பரவியது. அதுமட்டுமல்லாது படிப்பும் எனக்கு நன்கு வர ஆரம்பித்தது. தமிழ் தெரியாது என்று இரண்டு முறை நான்காவது படித்த நான் பிறகு தமிழை சரமாரியாக படிக்கக்கூடிய நிலைக்கு வந்தேன். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்து வகுப்பில் முதல் மாணவன் ஆகினேன். அன்று பள்ளி நிர்வாகம் என்னை அழைத்து மிகவும் ஊக்குவித்தது. மேலும் அப்பொழுது என்னுடைய அறிவியல் ஆசிரியர் எனக்கு குடுத்த பயிற்சியின் அடிப்படையில் கொசு கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளைமாற்ற மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எங்கள் குழுவினர் சமர்ப்பித்தோம். அந்தக் கண்காட்சியில் எங்கள் குழு வெற்றி அடைந்தது.

மேலும் எங்கள் பள்ளியில் சிறந்த மாணவராக செயல்பட்டதால் ஸ்கூல் பீப்புள் லீடராக பள்ளி என்னை ஆக்கியது. மேலும் விளையாட்டிலும் படிப்பிலும் இரண்டிலும் ஒருசேர வெற்றி பெற்றதால் என்னை பள்ளி நிர்வாகம் தேர்வு செய்ததாக பள்ளியின் மேடையில் ஆசிரியர்கள் கூறினார்கள். ஸ்கூல் பீப்புள் லீடராக இருக்கும்பொழுது அனைத்து மாணவர்களுடனும் அனைத்து ஆசிரியர்களுடன் அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய தமிழ் ஆசிரியை சந்திரா, ஆங்கில ஆசிரியர் ஜூலியட், கணித ஆசிரியர் சௌந்தர்ராஜன், சமூக அறிவியல் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராஜ், பிளிக்ஸ் ஆகிய ஆசிரியர்கள் ஹவுஸ் இன்சார்ஜாக இருந்தார். போன்ற அனைத்து ஆசிரியர்களும் எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்து கொண்டே இருந்தனர். இவர்கள் என் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறை என் வாழ்வின் வெற்றிக்கான ஆலோசனை என்பதை இன்று நான் உணர்கிறேன்.

இப்படி பள்ளியில் அனைத்து வேலைகளையும் ஓடியாடி செய்வேன். ஸ்கூலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வைக்கும் பொழுது நானும் அவர்களுக்கு உதவி செய்வேன். மேலும் பள்ளியின் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவது உண்டு. அப்படி ஒரு நாள் உதவி செய்யும் பொழுது இடது கட்டை விரலை கத்தியில் வெட்டிக் கொண்டேன். ஆசிரியர்கள் உடனே முதல் உதவி அளித்து என்னை அழைத்துச் சென்றனர். மேலும் பயிற்சியிலும் கவனத்தோடு செயல் பட்டேன். அந்த சமயத்தில்தான் மாநில போட்டிக்கு என் பெயரை பரிந்துரை செய்தார்கள்.

மாநில போட்டிக்கு என்னுடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதால் பயிற்சியாளர் எனக்கு மிகவும் கடினமாக பயிற்சி அளித்தார். ஒரு வார காலம் இரவு பகலாக தீவிர பயிற்ச்சி பெற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில போட்டிக்கு சென்று தங்கம் வென்றோம். தஞ்சாவூரில் இருந்த வந்து, அதுவும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி தங்கம் வென்றிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த மாநில அளவிலான போட்டியில் கால் சூ அணியாமல் ஓடியதை பார்த்த பலர் என்னை அழைத்துப் பாராட்டினார்கள்.
பிறகு 100 மீட்டர், 200 மீட்டர், லாங் ஜம்ப் என்று ஒவ்வொரு போட்டியிலும் களம் காண ஆரம்பித்தேன். பங்கேற்கும் பெரும்பான்மையான போட்டிகளில் முதல் இடமே. இப்படி சப் ஜூனியரில் தங்கம். மேலும் தொடர்ந்து விளையாடும் பொழுது தான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாம் ஓடிய ஓட்டம் மாவட்ட ரெக்கார்ட் ஆனது.
பிறகு ஆசிரியர்கள் எனக்கு தனி கவனம் செலுத்தினர்கள். சேலத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றேன்.

தொடர்ச்சியாக கரூரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம். இப்படியாக ஜூனியர் அளவிலான போட்டிகளில் வென்றும், மேலும் படிப்பிலும் முதல் மாணவனாக என்னை மாற்றிய தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால். ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்காக என்னை செங்கல்பட்டு பள்ளிக்கு மாற்றினார்கள். இவ்வளவு நாள் தஞ்சாவூரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த என்னை ஆத்தூர் ஹோமுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கின்றனர். ஆத்தூர் ஹோமுக்கும் பள்ளிக்கும் நீண்டதூரம் இருப்பதால் தினமும் நடந்தே செல்வேன். அப்பொழுது தர்மேஸ்வரர் சூபிரண்ட் மூலமாக  அரசினர் இளையோர் இல்லத்தில் தங்க வைக்கிறார்கள்.

செங்கல்பட்டு பள்ளியிலும் விளையாட்டில் அனைவரும் பேர் சொல்லும் அளவிற்கு சென்றேன். அப்பொழுது  விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓடுவதைப் பார்த்த என்னுடைய சீனியர் ராஜூ பள்ளிக்கு அருகே உள்ள பஸ் ஓனர் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார். அவர் எனக்கு லோயர், டீ- ஸ்சர்ட் மற்றும் டிராக்சூட் வாங்க ஸ்பான்சர் செய்கிறார். கதாநாயகனின் அடுத்த கட்ட நகர்வை பற்றி அறிய அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்.
(உண்மைக் கதை அடுத்த வாரம் தொடரும்)

3

Leave A Reply

Your email address will not be published.