குழந்தை வரம் தரும் குங்குமவல்லி

0

திருச்சி உறையூரில் வரலாற்று சிறப்பு மிகுந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயம் பலநூறு வருடங்களுக்கு முன்பு உறையூரை ஆட்சி செய்து கொண்டிருந்த சூரவாதித்த சோழன் இந்திரன் மற்றும் நாகராஜனின் அனுமதியோடு நாககன்னிகைகளில் ஒரு பெண்ணான காந்திமதி என்பவரை மணந்தார்.

சிவ பக்தியில் மிகவும் சிறந்து விளங்கிய அப்பெண் திருசிர மலையில் எழுந்தருளியிருந்த தாயுமான சுவாமியை வழிபாடு செய்து வந்தார்.

மிகுந்த பக்தி உடையவராக இருந்த காந்திமதி கர்ப்பவதியானாள். அந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தன்னால் தாயுமானவரைத் தரிசிக்க முடியாமல் போனதை நினைத்து கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்துள்ளார். வேண்டுதலைக் கேட்ட தாயுமானவர் இறங்கி ரிஷபாரூடமாக (பசுவின் மேல் அமர்ந்து இருக்கும் சிவன்) காட்சி தந்து, உன்னுடைய மகப்பேறு காலம் வரை நீ என்னை இதே இடத்தில் தரிசிக்கலாம் எனக்கூறி காட்சி அளித்துள்ளார்.

இறைவழிபாட்டிற்காகச் சென்ற சாரமாமுனிவா் நந்தவனம் பகுதிக்கு பூப்பறிக்க சென்றபோது இந்தக் காட்சியை பார்த்தார். இப்புராண சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகத் தான் ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கர்ப்பமாக உள்ள பெண்களுக்காகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும் பொன், காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு உள்ளிட்டவை அணிவித்துச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இங்கு கோவில் கொண்டுள்ள அம்பாள் கும்குமவல்லி தாயாருக்கு இவ்வாறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

முதல்நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வரும் பெண்களுக்கு அம்பாளுக்கு சாற்றப்பட்ட வளையல்களுடன் பிரசாதம் வழங்கப்படும். 3ம் நாள் அம்பாள் கல்யாண கோலத்துடன் காட்சி தருகிறாள்.

அப்போது அவரை தரிசனம் செய்வதால் மணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் நடைபெற வேண்டி அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.