விவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்.

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 28 திமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று திருச்சியின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, விசிக, போன்ற பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு, மற்றும் கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
