
பகத்சிங்கின் 113 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் என்னுடைய 113 ஆவது பிறந்தநாள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் சார்பில் திருச்சி பெரிய மிளகுபாறை அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை வகித்தார். மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித் மற்றும் ஏஐடியூசி தொழிலாளர் சங்க தலைவர் சுரேஷ் , இப்ராகிம், சூர்யா ஆகியோர் கலந்து.

உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சி

திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் பகுதியில் பகத்சிங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எதற்கு பகுதி செயலாளர் சரண் சிங் தலைமை வகித்தார், மேலும் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தார். மற்றும் முருகன், ஆனந்த், கௌதம் போன்ற அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
