“வந்தே மாதரம்” என முழங்கிய இஸ்லாமியர்கள்

மத நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் திருச்சி மக்கள்

0

திருச்சிராப்பள்ளி நகருக்கு முதன் முதலாக இஸ்லாமிய சுடரை ஏற்றி வைப்பதற்காக அடி எடுத்து வைத்தவர் தான் மகான் நத்ஹர்வலி.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிரியா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த அவர் திருச்சிராப்பள்ளி நகரில் பல காலம் வாழ்ந்து நபிகள் நாயகத்தின் அற போதனைகளையும், உரைகளையும் போதித்து வந்தார்.

இவருடைய முயற்சியால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் திருச்சி மாநகருக்குள் அதிகரித்தது. இவறுடைய மதப்பணியால் இன்றும் இவரது பெயரை தாங்கி நிற்க்கும் நத்ஹர்ஷா தர்கா திருச்சியின் அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்று.

இவர்கள் மதத்தை தாண்டி நாட்டிற்காகவும் தங்களையுடை பங்களிப்பை தந்துள்ளனா். இந்திய சுதந்திர போராட்டத்தில் தங்களுடைய பலத்தை காண்பித்தனா். 1920ல் காந்திஜி மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு வருகை தந்தார்.

இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்க செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹிம் தமிழிலும், டாக்டர் அப்துல் சுபான் சாகிப் இந்துஸ்தானியிலும் வரவேற்பு பத்திரம் படித்து அளித்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அன்றிரவு காந்திஜியும் சவுகத் அலியும் கள்ளிக்கோட்டைக்கு ரயிலில் புறப்படும்போது 10,000க்கும் மேற்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் “அல்லாஹ் அக்பர்”, “வந்தே மாதரம்” என்று முழக்கமிட்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

1930ல் நடைபெற்ற உப்புசத்தியாகிரக போராட்டத்தில் யாப்கூப் ஹசன், மதுரை மௌலான சாகிப் மற்றும் பல முஸ்லீம் தொண்டர்களும் கலந்து கொண்டு காலை மாலை பாடப்பெற்ற பிரார்த்தனை கூட்டங்களில் குர்ஆன் வாசித்துள்ளார்கள். 1931ல் ராஜகிரிஜனாப் முகம்மது காசிம் சாகிப்பின் மரணத்திற்கு ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கமிட்டி இறுதி அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றியது.

வரகனேரி ஷேக்தாவூத் மகன் முகம்மது சுல்தான் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் 219 கொரில்லாப் பிரிவு 61675 எண் யூனிட்டில் சிப்பாயாகப் பணியாற்றியுள்ளார். அலி சகோதரர்களின் தாயார் ஆபாதிபானு சாகிபா கிலாபத் இயக்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

1938-1947 வரை சுதந்திர போராட்டத்தில் தஞ்சை எஸ்.ஏ.ரகீம் இம்மாவட்டத்தி்ல் தனது உணர்ச்சி மிக்க உரைகளால் மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய தீரர் ஆவார்.

தனிநபர் சத்தியாகிரகத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் கரூரைச் சேர்ந்த நன்னாசாகிப் மற்றும் அவரது மனைவி பியாரிபீவி ஆகியோர் தீவிரமாகப் பங்காற்றி கரூரில் எழுச்சிமிக்க உரையாற்றி சுதந்திரவேட்கையை வளர்த்தனர்.

வேலாயுதம்பாளையம் எம்.எம்.ராஜன் ஆங்கில அரசர் எட்வர்டு மன்னருக்கு வாழ்த்துக்கூறும் பாடலைப் பாட மறுத்தவர். ஜமால் முகமுது கல்லூரி நிறுவனர் காஜாமியான் ராவுத்தர், கதர் ஆலை அமைக்க 50 ஆயிரம் ரூபாய் அக்காலத்திலேயே அளித்தவர்.

எஸ்.ஏ.எஸ்.முகமதுசாகிப், உறையூர் எம்.சேக்பாபா, கீரனூர் வி.கே.எஸ்.முகமது மொகிதீன், அப்துல் அஜிஸ், அக்துல்கரீம், அவரது மனைவி மரியம்பீவி, அப்துல் காதர், பாலக்கரை அப்துல் ரஹ்மான் பெல்லாரி சிறையில் வாடிய அரியலூரைச் சேர்ந்த குலாம் காதர், கே.என்.ஹமீர்கான், தங்கமீரான் ராவுத்தர், மூர்ஷா ராவுத்தர், ஷேக் தாவூத் சாகிப், போன்ற பல முஸ்லீம் தியாகிகள் தேச விடுதலைக்காக பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

முகமது இப்ராஹிம் கலிபுல்லாஹான், இப்ராஹிம்ராவுத்தர் ஆகியோர் சுதந்திரத்துக்கு முன்பு நகர மன்றத்தலைவர்களாக இருந்துள்ளனர். மௌலானா சையத் முர்துஸா சாகிப், எம்.கே.எம்.அப்துல்சலாம் ஆகியோர் டெல்லி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

வரகனேரியைச் சேர்ந்த அப்துல்வகாப் ஜானிபாய் மேல்சபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அவரும் கண்மருத்துவர் அமிருதின் சாகிப் இருவரும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர்.

முஸ்லீம் அமைப்புகள்
முஸ்லீம் இலக்கிய மன்றம்(1916), அன்ஜீமனே ஹிமாயத்தே இஸ்லாம் பேகம் சாஹிபா மஸ்ஜித்(1922), அன்ஜீமனே ஹிமாயத்தே இஸ்லாம் பேகம் சாஹிபா மஸ்ஜித்(1922), அன்ஜீமனே தன்ஸிமே அஹ்லே சுன்னத்-வ-ஜமாத், நூருல் இஸ்லாம் அஸோசியேசன்(1975), முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கம்(1956), மத்ரஸா அஸ்ஸிராத்தல் முத்தகீம்(1934), பீமநகர் முஸ்லீம் சுன்னத் ஜமாஅத்(1952), பீமநகர் முஸ்லீம் பௌண்டேசன் டிரஸ்ட் (1999), இஸ்லாமிய நல்வாழ்வு கழகம்(1975), தப்லே ஆலம் பாதுஷா இசை மன்றம்(1981), உருது மஜ்லீஸ்(1989)

.
பள்ளிவாசல்கள்
பேகம் சாஹிபா மஸ்ஜித்(பெரியகடை வீதி), கான்மியான் பள்ளி, பஞ்ச மினார் பள்ளி, ஹஸ்ரத் சையத் முஸ்தபா அவுலியா.

தர்க்காக்கள்
ஒடுக்கம்பட்டி தர்கா, நத்ஹர்வலி தர்கா, காஜாமலை தர்கா, குத்பிஸா தர்கா, பண்ணடிபீ தர்கா-உறையூர், மத்ரஸா, மத்ரஸயே முகமதிய அரபி, உருது நிஸ்வான், கார்தியா ஹிதாயத்துன் நிஸ்வான், மத்ரஸா அஸ்ஸிராத்தல் முஸ்தஹிம், ஜாமி அதுல் பிர்தௌஸ் அரபிக்கல்லூரி, ஜெயாமியா ஓரியண்டல் அரபிக்கல்லூரி, உம்ம ஹத்துல் ஜினான் மகளிர் அரபி பாடசாலை, தென்னிந்திய முர்துஸாஇய கல்வி பண்பாட்டு நிறுவனம், உஸ்வதுன் ஹசனாவின், ஜாமிஆ சிராஜூம் முனீர் அரபிக்கல்லூரி, ஹாஜி ஹபீப் நினைவுமன்றம், ஜாமி ஆ இன் ஆமுல் உலூம் மதனீமஜ்லிஸ் அரபிக் கல்லூரி, ஜாமிஆ அன்வாருல் உலும் அரபிக் கல்லூரி காஜா நகர், பீமநகர் துருப்பு மஸ்ஜிது ஜமாஅத், பரிமள சுன்னத் ஜமாஅத்.

இஸ்லாத்தின் இணையற்ற ஆலீம்கள்
மர்ஹீம் மௌலானா மௌல்லவி அபுல் ஹஸனாத் குத்புதீன் சாகிப் பாகவி, மௌல்லவி அப்துல்கபூர் சாகிப், மௌல்லவி சுலைமான் சாகிப், ஹாஜி எம் முகமது இப்ராகிம் சாகிப், கீழம்பூர் ஆலீம், மௌலானா ஹாஜி அப்துல் ஸலாம் சாகிப், மௌலவி சையத் அப்துல் கனிசாகிப், மௌலவி ஹாஜி சுல்தான் அகமது.

ஹாஜிமார்கள்
சையத் ஷாஹ் முஸ்தபா காதரி, சையத் ஷாஹ் வஜ்ஹூல்லா காதரி, சையத் அப்துல்கனி பாகவி.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இஸ்லாமயி மதம் திருச்சியில் வளர துவங்கி அதுவே இன்று மற்ற மதத்தினருக்கு இணையான அளவில் பழுகி பெருகி உள்ளனா். அவர்களின் மிக முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையில் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்களால் முடிந்த பங்களிப்பை கடவுளுக்கு வழங்கி வழிபாடு நடத்துகின்றனா்.

இந்த நாட்களில் ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.

அந்த நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்லாம் உண்பதென்பது மெய் மறதியை உண்டாக்கும்.

சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கி விடும். நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும்.

ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் நாடக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர, மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி, அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் – உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.

நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் – மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், பெண்ணிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன.

இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவிற்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.
– ஜோஸ்

Leave A Reply

Your email address will not be published.