மனிதக்கடவுள் சூர்யா என்று போஸ்டர் ஒட்டிய திருச்சி ரசிகர்

0
Business trichy

மனித கடவுளான நடிகர் சூர்யா

திருச்சி,
நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில்
காய்கறி வியாபாரம் செய்துவரும் விக்னேஷ் மனிதக்கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தை துவக்கி திருச்சி மாநகரம் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

loan point
web designer

இது குறித்து மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற நிறுவனர் விக்னேஷிடம் பேசுகையில்,
ஆதவன் படம் பார்த்ததிலிருந்து சூர்யாவின் தீவிர ரசிகர்.
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பேசியது மாணவர்கள் நலன் காக்கும் வகையில் இருந்தது.
அதனால், திருச்சி மாவட்டத்தில் மனிதக்கடவுள் சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தை துவக்கி BANED NEET EXAM
என 7 ஆயிரம் ரூபாய் செலவில் திருச்சி மாநகரம் முழுவதும் மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற பெயரில் ஆறு பிட் போஸ்டர் ஒட்டினேன் என்றார்.

nammalvar

அகரம் பவுண்டேஷன் பணியானது இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் உள்ளது.13 வருடம் தீவிர ரசிகராக இருந்த நான் மனிதக்கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணிமன்றம் துவங்கி மாநில நிர்வாகிகள் ஒப்புதலுக்காக தகவல் அனுப்பியுள்ளேன் என்றார்.
மனிதக்கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற போஸ்டரில் வாய்மையே வெல்லும் என அச்சிட்டு நடிகர் சூர்யா சட்டை காலரை தூக்கி பிடிக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அறம் வழி நடக்கும் புது சரித்திரமே உங்கள் வழியில் ஒன்றிணைவோம்.
மாணவர்களோடு துணை நிற்போம் என அச்சிட்டுட்டுள்ளார்.
போஸ்டர் பின்புலத்தில் கொடிகளுடன் ஆர்ப்பரிக்கும் கூட்டத்துடன் இளைஞர் ஒருவர் BANNED NEET EXAM பதாகையை தூக்கிப்பிடித்து உள்ள படம் இடம் பெற்றுள்ளது.

திரைப்பட நடிகராக பார்க்கப்பட்ட சூர்யா மனித கடவுளாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.