கவுன்சிலர் முதல் துணை மேயர் வரை – திருச்சியின் அரசியல் ஆளுமை !!

0

கவுன்சிலர் முதல் துணை மேயர் வரை – திருச்சியின் அரசியல் ஆளுமை !!

 

தன்னலம் கடந்த மனிதநேயம் தன்னலம் மறந்த மனிதநேயச் சேவை , தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவன்பு, கருணை,  மத நல்லிணக்கம், விட்டுக்கொடுத்தல் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துபவரே அரசியலில் வெற்றி காண இயலும்.

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை அதுவும் திமுகவின் பிரதான முக்கிய பிரமுகர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராகி மக்கள் தேவைகளை பூர்த்தி செய்த ஜெ.சீனிவாசன்  பாலக்கரை, எது குல சங்கத்தில் துவக்க கல்வியையும்,பாலக்கரை, பொன்னையா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையும் தெப்பக்குளம் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் பயின்றார்.
ஜமால் முகமது கல்லூரியில் பிஏ வரலாறு பாடப் பிரிவை பயின்றார்.

கால்பந்து விளையாட்டில் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றவர். சப்-ஜூனியர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்ட அணியில் இடம் பெற்றவர்.

அதே நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையில் ஈர்ப்பு ஏற்பட்டு கழகப் பணியாற்றினார்.

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலக்கரை சேர்ந்தவர் தான். நாம் இன்றைக்கு பார்க்க போகும் சீனிவாசன். கடுமையான உழைப்பாளி.. 90 களில் அரசியல் பயணத்தை தொடங்கி 2001 ஆம் ஆண்டு கவுன்சிலர் ஆகி தன் அரசியல் வாழ்வில் அடுத்த  அடியெடுத்து வைத்தவர் தான் இந்த சீனிவாசன்..

பின்னர் 2006 தனக்கு கிடைத்த வட்ட செயலாளர் பதவியை செவ்வனே செய்து மாநகராட்சி மண்டல தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டவர்,  அதன் பிறகு 2009 இல் அதிமுகவின்  எதிர்கட்சி தலைவராக   மாநகராட்சியில் பொறுப்பேற்றார்.

 

இங்கு தான் இவரது அடுத்த கட்ட நகர்வு வட்டத்தில் நன்கு செயல்பட்டு அரசியல் செய்த இவரை, மாவட்டத்தில் அம்மா பேரவை செயலாளராக மறைந்த முன்னால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நியமித்தார்.

 

ஜெயலலிதா தனக்கு இட்ட பதவியின் பொறுப்புணர்வுடன் வேலை செய்வதில் கெட்டிக்காரர் இந்த சீனி.  அதே சமயத்தில் வட்ட அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராகி அரியமங்கலம் கோட்ட தலைவராக பொறுப்பேற்றார் சிங்க மகன் சீனி.

இதன் மூலம் அவருக்கு 2014 ஆம் ஆண்டு பொது மக்கள் ஆதரவுடன் துணை மேயராக பதவி ஏற்றார். இதன் மூலம் இவர் ஆற்றிய பணிகள் உயர்ந்து மேல்மட்ட அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார்.

 

மேலும் திருமதி.சசிகலா மற்றும் TTV தினகரன் போன்ற ஆளுமை நிறைந்த தலைவர்கள் தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்து  ஒருங்கிணைந்த அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக TTV தினகரன் அவர்கள் பொறுப்பேற்ற போது. அப்போது இருந்த மாநகர் மாவட்ட செயலாளர்  வெல்லமண்டி நடராஜனை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக கழக தொண்டர்களோடு நெருங்கி பழகும் எளியவர் சீனிவாசனை 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் பதவியில் நியமித்தார்.

பதவி ஏற்ற முதல் நாள் இன்று வரை அயராத உழைப்புக்கு சொந்தகாரர் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

மேலும்   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று உருவான போது திரு. TTV தினகரன் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் விரும்பும்  மாவட்ட செயலாளர்களில் ஒருவர்தான் இந்த சீனிவாசன்.

இந்திய அளவில் நீட் தேர்வை எதிர்த்து இவரின் பொறுப்பில் திருச்சியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு மாநாடு திரு. TTV. தினகரன் அவர்களை யார் என்று தெரியாத அனைத்து விதமான மக்களுக்கும் கொண்டு போய்  சேர்த்த பணி  இவருடைய பணியாகும். இதன் மூலம்  25 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தி இவருக்கு நிகர் இவர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் பணியை மிக சிறப்பாக செய்தார்.

அவ்வாறாக வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்தநாள் காணும்   இளைஞர்கள் அதிகம் விரும்பும் எந்நேரமும்  சுறுசுறுப்பாக இயங்கும் அரசியல் தலைவர் சீனிவாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுவதில் பெருமை அடைகிறது ..

Leave A Reply

Your email address will not be published.