புதிய வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

0
D1

புதிய வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி, செப்.24: இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

அவை
1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்,

D2

2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்

3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.

N2

இந்தச் சட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்றது மற்றும் பொதுநல அமைப்புகள் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு நடத்தியது.

மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை விவசாயிகள் எழுப்பினர். தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமையில்
புதிய வேளாண் சட்ட நகலை எரித்தனர்.

சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், மக்கள் அதிகாரம் செழியன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் பஷீர், தமிழ் தேசிய பேரியக்கம் கவித்துவன் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.