உலகத் தமிழர்களின் இணைப்புப் பாலமாய் இயங்கும் திருச்சி எழுத்தாளர் நந்தவனம் சந்திர சேகரன்

0
1 full

ஆர்வத்துடிப்பு நிறைந்தவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பார் வில்லியம் மெக்டே . படைப்புத் தளத்தில் ஆர்வம் மிக்க இளைஞராய் சிறந்த இலக்கியவாதியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் நந்தவனம் சந்திரசேகரன்.

கடந்த இருபது வருடமாகக் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பல ஆக்கங்களை எழுதி வருவதோடு இனிய நந்தவனம் என்ற மக்கள் மேம்பாட்டு மாத இதழின் ஆசிரியராக இருந்து சிறந்த பத்திரிகையாளராகவும் பரிணாமம் பெற்று விளங்குகிறார்

தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாய் வளர்த்துக் கொண்டதோடு இல்லாமல் எழுத்துத் துறையில் ஆர்வமுடன் இயங்க வரும் புதியவர்களையும் ஊக்கப்படுத்தி வழிகாட்டி அவர்களையும் எழுத்தாளராய் உருவாக்கும் பெருமை இவருக்கு உண்டு

2 full

இனிய நந்தவனம் பதிப்பகத்தைத் தொடங்கி பலரது படைப்புகளை நூலாக்கி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளார். இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து உலக அளவில் பல வாசகர்களிடம் நூல்களைக் கொண்டு சேர்த்துள்ளார்

புதிதாக புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்று ஆர்வத்துடன் வருபவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கி புத்தகம் வெளியிட்டுத் தருவதோடு .நூல் வெளியிட்டு விழாக்களையும் நடத்தித் தருகிறார்

தோல்விகளைத் தோற்கடிப்போம், .நான் கண்ட மியான் மா,. காகிதப்பூவில் தேன் துளிகள், வண்ணத்துப்பூச்சிகளின் மீது நத்தைக் கூடுகள், மலேசிய படைப்பாளுமைகள் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்
இவரது படைப்புத் தளம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுடுக்களுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழ் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் சந்தித்து.தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இலக்கிய விழாக்கள் நடத்தி நூல்கள் வெளியிடுவது, பல்துறையைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்ச்சிக்கான பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது இவரது தனிச் சிறப்பு .

தமிழகம் மற்றும் அயல் நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துக் கலை இலக்கிய வளர்ச்சிக்கான பணிகள் என்னென்ன செய்யலாம் என்று ஆலோசித்து வளரும் இளந்தலைமுறையினருக்கு தமிழ் மீதான பற்றுதல் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உலகத் தமிழர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து செல்பட்டு வருகிறார் நந்தவனம் சந்திரசேகரன்

வெளிநாடுகளில் இருந்து தமிகம் எழுத்தாளர்களை வரவேற்று அவர்களுக்குப் பாராட்டு விழா எடுத்து விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தியும் வருகிறார்

அண்மையில் மலேசியாவில் இனிய நந்தவனம் பதிப்பகம் மூலமாக மலேசிய முத்தமிழ் படிப்பகத்துடன் இணைந்து மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி அவர்கள் முன்னிலையில் பன்னாட்டு இலக்கிய விழா சிறப்பாக நடத்தியிருக்கிறார்

இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி தமிழ் மாமணி, இதழியல் செம்மல், எனப் பல அமைப்புகள் மூலமாக இருபத்தி மூன்று விருதுகள் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இலக்கியப் பணியே முழு நேரப் பணியாகக் கொண்டு திருச்சிக்குப் பெருமை சேர்த்து வரும் எழுத்தாளர் நந்தவனம் சந்திரசேகரனை நீங்களும் வாழ்த்தலாமே.

தொடர்புக்கு 9443284823.
-வெற்றிச்செல்வன்

3 half

Leave A Reply

Your email address will not be published.