புதிய வேளாண் சட்ட நகல் கிழிப்புப் போராட்டம்

0
D1

புதிய வேளாண் சட்ட நகல் கிழிப்புப் போராட்டம்

திருச்சி, செப்.24: இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

அவை
1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்,

D2

2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்

N2

3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
இந்நிலையில்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயி வஞ்சிக்கின்ற சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக SDPIகட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் இமாம்R_ஹஸ்ஸான்பைஜி தலைமையில் வேளாண் சட்ட மசோதா நகல் கிழித்தெறியும் போராட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா, திருவரம்பூர் பகுதியிலும் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட செயலாளர் K.K. நகர் முபாரக் அலி போராட்டதை துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நியாமத்துல்லா, மாவட்ட துணை தலைவர் பிச்சைகனி,
மாவட்ட பொருளாளர் வரகனேரி அப்துல் காதர் (பாபு ), SDTU தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் முஸ்தபா, மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ், செயலாளர் தர்கா முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டார்.

SDTU தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் மீரான் மொய்தீன் கண்டன கோசம் எழுப்பினார்.
போராட்டத்தில் SDPI கட்சியின் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள், SDTU மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கம் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவரம்பூர் பகுதியில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.