திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கைதான நபர் எச்ஐவி/எயிட்ஸ் இருப்பதாக நாடகம்

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்து கைதான நபர் எச்ஐவி/எயிட்ஸ் இருப்பதாக நாடகம்
திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்த நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
கோ-அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் முன்பு ஆபிஸர்ஸ் காலனி, மதுரம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகம் முன்பு திருச்சி, காட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
17 செப்டம்பர் 2020 இரவு சுமார் 11-30 மணிக்கு மேல் ஒருவர் போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளார். பதினெட்டாம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஆட்டோவில் நான்கு நபர்கள் அலங்கோலமான நிலையில் உதட்டில் காயத்துடன் ஆடையில் ரத்தம் வடிந்து வந்த நிலையில்
ஸ்ரீ அம்மன் மெஸ் அருகில் இறக்கி விட்டு விட்டனர்.
இறக்கி விடப்பட்ட பெண் கட்டிட வளாகம் முன்பு உள்ள படியில் அமர்ந்துள்ளார். அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது.
அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்திக் இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர்க்கும், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது
இலியாஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த இலியாஸ் அரசு உதவி எண்ணுக்கு போன் செய்ய, போன் தொடர்பு கொள்ளாமல் போக என் திருச்சி டாட்காம் மின்னிதழ் ஆசிரியர் வெற்றிச்செல்வன் என்ற விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் திருச்சி,புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு சென்று பார்த்த விஜயகுமார் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர்க்கு தகவல் அளிக்க, உடனடியாக காவல் உதவி எண் 100க்கு போன் மூலம் புகாரை வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர்.
அதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் இளம் பெண்ணை பாதுகாக்கும் வகையில்
வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா,
என் திருச்சி டாட் காம் ஆசிரியர் விஜயகுமார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன், செய்தியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுத்தனர்.
புகார் அடிப்படையில் விசாரணைக்கு வந்த
கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம், உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் காவலர்கள் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பலர் என்னை கற்பழித்து விட்டார்கள் என தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி,சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் தமிழக முதல்வர்,
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு
சாலையில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை
கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்
ஆதரவற்று இருப்பிடமின்றி சாலையோரம் தங்கியிருக்கக் கூடிய பெண்கள் வன்கொடுமைகளுக்குஆளாகாமல் பாதுகாப்புடன் பராமரித்து அவர்களின் நலன் காக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இச்செய்தியை அறிந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் காவல் ஆணையர்க்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வாட்ஸ்அப் மூலம் மனு அனுப்பியது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் விசாரணை செய்து வந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி , அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா உள்ளிட்ட காவலர்கள் தொடர் விசாரணையில் திருச்சி புத்தூர் கீழே வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த
முஸ்தபா வயது. 42/2020 , விழுப்புரம் மாவட்டம் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சிவா வயது 23/2020 இரண்டு நபர்களை
376 Dபிரிவில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கூட்டு பலாத்காரத்தில் கைதான முஸ்தபா திடீரென தனக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பதாக கூறினார்.
உடனே அதிகாரிகள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்து எச் ஐ வி பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் எச்ஐவி நோய் தொற்று இல்லை என பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவச் சான்று அளித்தனர்.
தொடர்ந்து மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக கூட்டு பலாத்கார சம்பவத்தில் கைதான முஸ்தபா எச்ஐவி நபர் என நாடகம் நடத்தியது தெரிய வந்தது.
முஸ்தபா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பழைய குற்றவாளி ஆவார்.
