திருச்சியில் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செங்குளம் காலனி மக்கள் ஆணையரிடம் மனு:

திருச்சியில் குப்பை பிரிக்கும் நுண் உரம் செயலாக்கு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செங்குளம் காலனி மக்கள் ஆணையரிடம் மனு:

டாக்டர் அம்பேத்கர் குடியிருப்போர் ஒருங்கிணைந்த நல சங்கம் சார்பில் குப்பை நுண்ணறிவு மையம் அமைப்பதை எதிர்த்து செங்குளம் காலனி மக்கள் ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு:

அரியமங்கலம் கோட்டம் 23வது வார்டு பச்சாம்குளம், செங்குளம் காலனி மக்களும் அருகில் உள்ள பூந்தோட்டம் தெரு மக்களும் அதன் மையத்தில் உள்ள மாநகராட்சி சொந்தமான கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பொதுகழிப்பறையை இடித்து அங்கு மைக்ரோகம்போஸ்ட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, டாக்டர் அம்பேத்கர் குடியிருப்போர் ஒருங்கிணைந்த நல சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பொது கழிப்பிடம் இருக்கும் இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ஆரம்ப சுகாதார மருத்துவமனையை நிறுவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இதனால் செங்குளம் காலனி மற்றும் அருகில் உள்ள கர்ப்பிணி பெண்களும், பொதுமக்களும் இம்மருத்துவமனை உதவியாக இருக்கும்.
இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கபடுமென AC சண்முகம் உறுதியளித்தார்.
