தனியார் மயமாக்கலுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0
D1

தனியார் மயமாக்கலுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பிலும் செப்டம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கங்களும்  பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

D2
N2

அதன் ஒரு பகுதியாக திருச்சி தலைமை தபால் நிலையம் வாயில் முன் தொமுச மாவட்ட தலைவர் குணசேகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுரேஷ், தொமுச மாவட்டச் செயலாளர்கள் நெல்சன், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் துரைராஜ், எச் எம் எஸ் அமைப்பின் ஜான்சன், ஏஐசிசி டியூ மாவட்ட செயலாளர் தேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சோமரசம் பேட்டை பகுதியில் எம்ஆர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

N3

Leave A Reply

Your email address will not be published.