அப்பா முதல் MD வரை – கே.என். ராமஜெயம்

0
1

திருச்சியில் நடந்த மிகப்பெரிய மாநாடுகளை முன்னின்று நடத்தியவர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு பலம் அவரது தம்பிகள் தான். அதில் ராமஜெயம் நேருவின் நிழலாகவே வாழ்ந்தார்.

ராமஜெயம் மறைந்து நான்கு வருடங்களாகிறது. அதன் பிறகு இப்போ தான் நேருவின் குடும்பத்தில் ஒரு விஷேசம் நடைபெறுகிறது. அதுவும் ராமஜெயம் மரணம் அடைந்ததற்கு முதல்நாள் இரவு, படுத்திருந்த ராமஜெயம், கைமீது படுத்த மகள் ஜனனியின் தலைமுடியை கோதிவிட்டபடியே இருந்தார். அடுத்த நாள் தனது உறவுகளை, குடும்பத்தைவிட்டு பிரியப்போகிறோம் என தெரியாது அவருக்கு, வாழ்நாளும் முழுவதும் பாசமாய் இருந்த அவரது மகள் ஜனனிக்கு இன்று திருமணம்.

வாழும் காலங்களில் பலருக்கு அச்சுறுத்தலாக வாழ்ந்ததாக சொல்லப்பட்டாலும் பலருக்கு உதவியபடி வாழ்ந்த ராமஜெயம் இல்ல திருமணவிழாவின்போது அவரைப்பற்றிய மலரும் நினைவுகளை நம்ம திருச்சி இதழ் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

2

திருச்சியிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்தான் நேருவுக்கு சொந்த ஊர். அப்பா நாராயணசாமி ரெட்டியார், அம்மா தனலெட்சுமி, உடன் பிறந்தவர்கள் ஏழுபேர், அதில் மூத்தவர் நேரு. அவரது தம்பிகளான ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் இப்போதும் நேரு வந்தால் நாற்காலியில் உட்காரவே மாட்டார்கள். அந்தளவுக்கு மரியாதை வைத்திருப்பவர்கள். அமைச்சர், நிலக்கிழார், பல கம்பெனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் இப்போதும் இவர்களின் குடும்பம் கூட்டுக்குடும்பமாகவே வாழ்கிறார்கள்.

தி.மு.க. வரலாற்றில் பிரமாண்டமான மாநாடுகளை நடத்திக்காட்டியவர் நேரு என்றால் அத்தனையையும் அண்ணனுக்கு நிழலாக இருந்து திருச்சியில் தி.மு.க.வின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றி மாநாடாக நடத்தியதும், தி.மு.க.வுக்கு சொந்தமாக கலைஞர் அறிவாலயம் கட்டி அனைவரையும் பிரமிக்க வைத்ததும் ராமஜெயம்தான்.


ராமஜெயம் 7 மொழிகள் சரளமாக பேசவும் , எழுதவும் தெரிந்தவர். பள்ளி பருவத்திலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம் உடைய இவர், தான் படித்த சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பில் கோல்டு மெடல் வாங்கினார். படிப்பை முடித்து தொழில் செய்ய ஆரம்பித்த இவர், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலங்களில் போர்வெல் போடும் கான்ட்ராக்ட், ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோனேஷியாவில் நிலக்கரி குவாரி, புதுக்கோட்டை எல்லையில் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தி வந்து மிகப்பெரிய தொழில் அதிபராக வளர்ந்தார்.

நேரு 1989ல் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக அமர்ந்ததும், தனது வெளிமாநிலப் பிசினஸ் விஷயங்களில் இருந்து ஒதுங்கிய ராமஜெயம், திருச்சியில் நிரந்தரமாகத் தங்கி பிசினஸ்களை கவனித்து வந்தார்.

தனது அண்ணன் நேருவைப்போல் தீவிர அரசியலில் நேரடியாக இறங்காமல், அவருக்கு பக்கபலமாக அரசியல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். இப்போதும் கே.என்.நேருவை திமுகவினர் அமைச்சர் என்றே அழைக்கிறார்கள். அவரது தம்பி ராமஜெயம் மரணமடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் அவரை பெயர் குறிப்பிட்டு சொல்லாமல் எம்.டி என்றே அழைக்கிறார்கள்.

சில வழக்குகளில் சிக்கி ராமஜெயம் பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது சிறை வளாகம் முழுவதும் இயற்கையின் மீது ஆர்வத்தால் என்னப்பா பாளையங்கோட்டைன்னு பேரு ஏற்றமாதிரியே பாலைவனமா இருக்குதுன்னு சொல்லி நூற்றுக்கணக்கான மரங்களை நட்டார்.

புத்தகம் படிக்கும் பழக்கம் உடைய அவர் சிறையில் இருக்கும் போது 500 மேற்பட்ட ஆங்கில புத்தகங்கள் படித்தாக அவர் அடிக்கடி சொல்வார். தில்லை நகர் பகுதிகளில் சாலையை அகலப்படுத்தும் போது அங்கிருந்த பல ஆண்டுகளுக்கு மேலான 50க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் என்னவாகும் என பல நினைத்தபோது, தானே சொந்த செலவில் அரசுக்கு பணம் கட்டி அந்த மரங்களை வெட்ட மனம் இல்லாமல் நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு எடுத்து சென்று புதிய இடங்களில் நட்டு புது உயிர் கொடுத்தார்.

அதில் சில மரங்கள் அவர் பல கனவுகளோடு கட்டிய திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி கட்டிடங்களுக்கு நடுவிலும் குளத்தின் கரைகளிலும் நடப்பட்டு இப்போது வளர்ந்து பெரு மரங்களாக நிற்கின்றன.

இந்தியாவிலே இல்லாத அளவிற்கும் வெளிநாட்டினரே வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய கல்வி வளாகம் அமைக்க வேண்டும் என்பது அவருடைய தீரா ஆசை இருந்தது, ஓரு குழந்தை அந்த கல்வி வளாகத்திற்கு நுழைந்தால் பிரிகேஜி முதல் முனைவர் பட்டம் வரைக்கும் படித்து செல்ல வேண்டும் என்கிற ராமஜெயத்தின் ஆசையில் உருவாக்கப்பட்டது தான் கேர் கல்லூரி, பொறியியல், கட்டிடக்கலை, சி.பி.எஸ்.சி. மருத்துவம், அனைத்து துறைகளும் சேர்ந்த படிப்புகள் ஓரே வளாகத்தில் இருக்கும் வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

வகுப்பறைகளை தமிழகத்தில் எந்த கல்லூரிகளிலும் இல்லாத அளவுக்கு மரம் சூழ, காற்றோட்ட வசதிகளுடன் இயற்கையான வெளிச்சத்துடன் வகுப்பறைகளை, கல்லூரி வடிவமைத்து இருப்பார்.

எந்த துறை பற்றி கேள்வி கேட்டாலும் அதை பற்றி ஆதி முதல் அந்த வரை அத்தனையும் தன் விரல் நுனியில் வைத்திருந்த அவர், சமூகத்தில் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர் அணியும் உடைகள் மிக எளிமையாக தான் இருக்கும். அவர் வைத்திருக்கும் செல்போன் மிக குறைந்த விலையில் கீபேட் மொபைலை வைத்திருப்பார்.

தான் செய்யும் உதவியை இதுவரைக்கு வெளியே சொல்வது வலது கை0.க்கு செய்வது இடது கைக்கு தெரிய கூடாது என்று அடிக்கடி சொல்லுவார்.

அதனால் ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகம் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால், அடுத்த நிமிடம் போன் பறக்கும். உடனுக்குடன் சரிசெய்வார். வருடா வருடம் பள்ளி அட்மிஷன் நேரங்களில், இவரது தில்லை நகர் அலுவலகத்துக்கு தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் சீட் வேண்டும் என வரிசையில் நிற்பார்கள்.

தன் கட்சிக்காரன் பணம் கட்ட முடியாத பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீட்டு வாங்கி டோனேஷனை இல்லாமல் படிக்க வைப்பார். தங்கள் ஊர்களில் கோயில் கட்ட பணம் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்ல்லாம் சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது..

இது ராமஜெயத்தின் ஒரு முகம். அவருக்கு மற்றொரு முகமும் உண்டு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோபக்காரர்.
எதையும் மின்னல் வேகத்தில் முடிக்கவேண்டும் என்கிற திறனும், யாரும் எதிர்பார்க்காத சிந்தனையும் அதை செயல்படுத்தும் விதமும் ராமஜெயத்தை நேரில் பார்க்க முடியாதவர்கள் ராமஜெயத்தை நேரில் பார்த்த சிலர் சொன்ன கற்பனைகள் எல்லாம் ராமஜெயத்தை பற்றிய பல்வேறு வகையான யுகங்களுக்கும், அவரை பற்றிய பிம்பங்கள் கற்பனையாக பரவ ஆரம்பித்தது.

உடம்பை பலமாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். எப்போதும் கீரீன் தேனீரை விரும்பி சாப்பிடுவார், தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் கொடுக்க சொல்லுவார். தவறாமல் நண்பர்களுடன் பூப்பந்தாடுவது, வாக்கிங் போவது வழக்கம். கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்துபோக நடக்க முடியாமல் சிரமப்பட்டார். கொஞ்ச நாள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடக்க முயற்சி செய்தார்.

நேரு அரசியலுக்கும், குடும்பத்திற்கு ராமஜெயமும் என்று இருந்த கட்டம் அதையும் தாண்டி தான் நினைக்கும் இலக்கை அடைவதற்கு பலமாக அரசியல் சரியாக இருக்கும் என்று நினைத்து தேர்தலில் நிற்கவேண்டும் என ராமஜெயத்தின் ஆசை. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிற்க ஆசைப்பட்டார்.

இந்த கால கட்டத்தில் தான் துரைராஜ் இட்டை கொலை வழக்கில் ‘ராமஜெயம்தான் குற்றவாளி என சித்தரிக்கப்பட்டது. ஆனால் ராமஜெயம் இறந்து பல வருடங்கள் கழித்து, திருவானைக்கோவிலைச் சேர்ந்த சாமியார் கண்ணன் தான்தான் ஒரு பெண் விவகாரத்தில்  அந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டு சிறையில் இருக்கிறார்.

செய்யாத குற்றத்திற்கு கொலை பழி சுமந்தார் ராமஜெயம். உண்மை காலம்கடந்து வென்றது. இப்போதும் ராமஜெயத்தின் பெயரை சொன்னால்கூட அவரது குடும்பத்தினர் பேசாமல் நிற்பார்கள். அந்தளவுக்கு ராமஜெயம் குடும்பத்தின் மீது அன்பாய் இருந்தார்.

தன் மகள் மீது அதிகமான பாசம் கொண்ட ராமஜெயம், அவர் ஆரம்பித்த கம்பெனிகளுக்கு மகள் பெயரான ஜனனி என்றே பெயர் வைத்தார். அப்படி அவரின் பாசத்திற்குறிய மகள் ஜனனி, தனது அவரது அப்பா ஆசையாய் வளர்த்த மரங்கள், பார்த்து பார்த்து கட்டிய கேர் கல்லூரி வளாகத்தில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் விவேக் அவர்களை மணமுடிக்கிறார்

. ராமஜெயம் மரணிக்கும் தருவாய் வரை இந்த இடங்களை அவ்வளவு நேசித்தார் ராமஜெயம் என்கிறார்கள். அவர் ஜீவன் அந்த வளாகத்தில் வலம்வரக்கூடும். தன்மகளை அங்கே சிலையாக நிற்கும் ராமஜெயம், காற்றாக கரைந்திருக்கும் அவர் மணமக்களை ஆசிர்வதிப்பார்.
ஜனனிக்கும் விவேக் அவர்களுக்கும் நம்ம திருச்சி இதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

3

Leave A Reply

Your email address will not be published.