கொடி மரம், பலி பீடம் என்றால் என்ன?

0
1

இன்றைய பதிவில் என் நண்பன் ஒருவன் பலி என்பது ஏதோ சக மனிதனை கொலை செய்து படையல் போடுவது என்பதாக கிண்டல் செய்து எழுதி இருந்தான். அதனால் சிறு விளக்கம்…

நாம் வணங்கும் தெய்வ சொரூபங்கள் அனைத்தும் பொருள் உலகமான நாம் வாழும் உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. (they do not belong to the material world we live in ). அவர்களுக்கு பொருள் உலகை சேர்ந்த எந்த பொருளும் தேவை படாது. கல்லும் ஒன்றுதான் மேலே தகடாக போட்ட தங்கமும் ஒன்றுதான்.

அப்போது இதெல்லாம் என்ன ???
பலர் கொடி மரம் என்பது தற்கால அரசியல் மற்றும் நாட்டு கொடி (flag post) என்பதாக பொருள் கொண்டு, இது அந்த அந்த கோவிலுக்கு தனியாக கொடி இருக்கும் போல என்று நினைக்கிறார்கள். இந்த கொடி என்பது ஒரு குழந்தையும் தாயையும் இணைக்கும் “umbilical cord” போன்றதே. தொப்புள் கொடி.

பொருள் உலகையும் அந்த ஆகாச (இது space இல்லை பொருள் உலகை தாண்டிய தன்மை) தன்மையும் இணைக்கும் தொப்புள் கொடி!!!
ஆகாயத்தில் பொருள் தாண்டிய உலகில் இருக்கும் இறைவன் பூமியில் வாழும் நம்மை காக்க நமது மனத்தால் வருத்தி அழைக்க ஒரு இணைப்பே இது. நாம் பொருள் உலகில் இருந்து அளிக்கும் பலவித பொருகளின் பின்புறம் இருக்கும் மனிதர்களின் “மன ஓட்டங்களை “(prayers and applications!!) மந்திர பூர்வமான (இது carrier waves) தன்மையுடன் சேர்ந்து.. அந்த தெய்வ சொரூபங்களை அடைகின்றன ..

பொருள் மற்றும் காலங்களை தாண்டி இருக்கும் அந்த தெய்வ சொரூபங்கள். பல வித மனிதர்களின் மன ஓட்டங்களையும். பஞ்ச பூத தன்மைகளை மாற்றம் அளிக்க வல்லவை.

2

ரெங்கநாதனுக்கு பலி பூஜை செய்தால் நாளை காலை கோவிலில் இருந்து செக் போட்டு பணம் அனுப்ப மாட்டான். நம்மால் நம்ப முடியாதபடி பல வித மனிதர்களை இணைத்து வைத்து வாழ்க்கையின் துன்பத்தை (உங்கள் பாவ புண்ணியத்தின் தன்மை கருதி) குறைப்பான்.

இன்று நடந்த பூஜையில் பல கோடி மக்களின் நீர்த் தேவைக்காக அரசே முன்னின்று நடத்துவதால், அரங்கன், இன்று இதை படிக்கும் பார்க்கும் பல மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து மழை பொழிய வைப்பான் என்பதாக கொள்ள வேண்டும் !!!

இந்த கொடிமரம் மற்றும் பலிபீடம் அரங்கனின் கோவிலில் நாம் வைக்கும் வேண்டுகோள்கள் ‘up link” பண்ணப்படும் ஒரு கருவி என இன்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். (நீள் தண்ட நமஸ்காரம் எல்லா கோவிலிலும் கொடி மரத்துக்குத்தான் என்பதே இதனாலே !!!)

எல்லாரும் அதைமுழுமையாக பார்த்து அரங்கனை வேண்டுங்கள். எப்படி நீர் பலி பீடத்தை குளிர்வைக்கிறதோ அதே போல உங்கள் குறைகளையும் அரங்கன் தீர்ப்பான்

.
– முகநூலில் விஜயராகவன் கிருஷ்ணன்

3

Leave A Reply

Your email address will not be published.