
திருச்சி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் காவல் ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் மனு

திருச்சிராப்பள்ளி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே திறந்தவெளி நூலகம் முன்பு நடைபாதை மேல் தங்கியிருந்த சாலையோரப் பெண் சில கயவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை Ntrichy.comசெய்தி மூலம் அறிந்தோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் மேலும் சாலையோரம் வசிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் திருச்சி காவல் ஆணையர் வாட்ஸ்அப் வழியாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
