மாற்றம் நம்மில் ஆரம்பமாகட்டும்…

0
1

காலம் ஒரு வற்றாத ஜீவ நதி. அது யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அந்த காலத்தின் ஒரு துளி தான் ஓர் ஆண்டு.
2016 நம்மில் நினைவுகளாய் பதிந்து இறந்த காலத்தில் அமர்ந்து விட்டது. மறக்க முடியாத பல நல்ல நிகழ்வுகளை சிலருக்கும், துயரமான இழப்புகளை சிலருக்கும், வெற்றிகளை சிலருக்கும், தோல்விகளை சிலருக்கும், உயர்வுகளை சிலருக்கும், தாழ்வுகளை சிலருக்கும், இப்படி பலவிதங்களில் எல்லார் வாழ்விலும் 2016 தன் சுவடுகளை பதித்து சென்று விட்டது.

ஊர்-நாடு-தேசம் என அரசியல் பேசியோ, உலகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கையை காப்போம் என்று சித்தாந்தம் பேசும் நிலையில் சராசரி மனிதர்களாகிய நமக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை. அதற்கென்று நிறைய சமூக சேவை ஜோக்கர்கள் இங்கு நிறையவே உண்டு.
நமது தனிபட்ட வாழ்வில் நாம் உயர முயற்சிப்போம். உலகை மாற்ற வேண்டுமெனில் முதலில் வீட்டுக்கு சென்று உன் குடும்பத்தை அன்பு செய் (If you want to change the world go home and love your family) என்ற அன்னை தெராசாவின் வார்த்தையையாவது இனி வரும் புத்தாண்டு 2017-ல் கடைபிடிக்க முயற்சிப்போம்.

சில்லறை காரணங்களுக்காய் சிதைந்து போகும் கணவன் – மனைவி உறவை சீர்படுத்துவோம். குழந்தை வளர்ப்பில் இன்றைய டிஜிட்டல் வளர்ச்சிக்கு குழந்தைகளை பறிகொடுக்காமல் அறிவின் வளர்ச்சியை விட பாட்டி சொல்லி கொடுத்த அனுபவ பாடங்களில் நமது குழந்தைகளை உருவாக்குவோம். பெற்றோர்களே முதல் ஆசிரியர் என உணர்ந்து எடுத்து காட்டாய் குழந்தைகள் முன் வாழுங்கள்.

2

குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியமானது ஆழமானது என்பதையும் அவர்களின் அன்பும் அரவணைப்பும் இறுதிகாலங்களில் கூட இல்லாமல் போனால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு நமது மறைந்த முதல்வரின் 75நாள் மருத்துவமனையின் அரசியல் பாடம் நமக்கு அறைந்து சொல்கிறது.

உறவுகளை ஒருபோதும் தள்ளி வைக்காதே என்று. 2016 என்ற வெள்ளை காகிதம் நம்மால் எப்படியெல்லாம் வரையப்பட்டதோ, கிறுக்கப்பட்டதோ, சேமிக்கப்பட்டதோ , வீணாக்கப்பட்டதோ, நம் மனசாட்சி தீர்பளிக்கட்டும். 2016 திரும்பப் பெறப்பட்டு 2017 என்ற புதிய வெள்ளைதாள் நம் கரங்களுக்குள் கால இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. போனால் திரும்ப பெறமுடியாத காலத்தை கருத்தாய் பயன்படுத்துவோம்.

இறைவனும் – இயற்கையும் நம்மை வழிநடத்தட்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.