தெரியுமா?

0

மண்ணச்சநல்லூர் திருக்குறள் பேரவை என்னும் அமைப்பு கவிஞர் மணி, பூ.ரெ.மாரிமுத்து அகியோரால் 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாதந்தோறும் இலக்கியக்கூட்டங்கள், திருக்குறள் போட்டிகள் நடத்தியது. திருச்சியில் 1953 ஆண்டில் சுப்பரயலு செட்டியாரால் திருக்குறள் கழகம் தொடங்கப்பட்டது. சுவாமி சித்பவானந்தர் தலைமையில் கி.ஆ.பெ. விசுவநாதனால் இக்கழகம் துவக்கிவைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம்:
1954ம் ஆண்டில் திருச்சி புத்தூரில்
டாக்டர் இ.பி.மதுரம் தலைவராகவும்
கேப்டன் சி.எம்.எஸ்.ராஜன், ஆர்.காளிதாஸ் ஆகியோர்களை துணைத் தலைவர்களாகவும் கொண்டு ஆர்.எம்.கிருஷ்ணன், எம்.கே.மூர்த்தி, வீ.பத்மநாபன் பாலக்கரை எம்.ரத்தினம்,
டி.பி.ரத்தினம், நாகரத்தினம், ரா.நாகரத்தினம், பாப்ஜான், எஸ்.லூர்துசாமி ஆகியோரால் இச்சங்கம் தொடங்கப்பட்டது.

ஸ்டார் உடற்பயிற்சி சாலை:

இந்த உடற்பயிற்சி சாலை 1.10.1941 ல் பாலக்கரை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. டி.எம்.சிங்காரம், பி.காத்தபெருமாள், டி.கே.அர்ச்சுனன்,
பி.எஸ்.வேம்பன், பி.கே.பாக்கியசாமி ஆகியோர் இதைத் தொடங்கினார்.

 

பால் உற்பத்தி: ஸ்ரீரங்கம் பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கம் 1939ல் தொடங்கப்பட்டது. இது 1980ல் திருச்சி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் எனப் பெயர் மாற்றப்பட்டது.

food

தமிழ்நாட்டில் முதன் முதலில் வேளாண்மை அறிவியல் மையம் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் குமரப்பெருமாள் நிலையம் என்ற பெயரில் 1977ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மையம் தற்போது அன்பில் தர்மலிங்கம் வேளாண்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பயிற்சிகளைக் வழங்கி வருகிறது.

திருச்சி வானொலியின் ஒரு மைல்கல் .1978 ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் நேர்முக வர்ணனை செய்து வருகிறது.

1964 ல் மதன்குமார் பட்டர்வொர்த் சாலையில் “அண்ணாமலை உடற்பயிற்சி சாலையை நிறுவினர் 1960 முதல் 1986 வரை மாவட்ட உடற்பயிற்சி ஆசிரியராகக் காவல்துறை மற்றும் விளையாட்டுத்துறையினருக்கு சிறந்த பயிற்சி அளித்து வந்தார்.

கூடையிலே ஒரு கோப்பை:

காமராஜரால் திருச்சிக்கு கிடைத்த வரமே பெல். இன்றைய கூடைப்பந்தின் வேர் மூலமாகவும் பெல் விளங்குகிறது என்றால் .திருச்சி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் முப்பது வருட வரலாறு கொண்டது. ஜேசுதாஸ் ,ரத்னகுமார் இவர்களைத் தொடர்ந்து கலைச்செல்வன் மாவட்ட கூடைப்பந்துக் கழகத்தின் செயலாளராக கடந்த 15 வருடகாலமாகச் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.