விண்ணப்பம் மாயம், அலுவலர்கள் அலட்சியம், தவிக்கும் சுய உதவிக்குழு பெண்கள்

0
full

விண்ணப்பம் மாயம், அலுவலர்கள் அலட்சியம், தவிக்கும் சுய உதவிக்குழு பெண்கள்.

கிராமப்புற மக்களின் வாழ்வை உயர்த்தவும் கிராமப்புற பகுதிகளை மேம்படுத்தவும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராமப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் சுய தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அரசு, வங்கிகள் மூலம் 25 பைசா வட்டி கடன் வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்திற்காக திருச்சி மாவட்டம், குணசீலம் ஊராட்சி, முசிறி ஒன்றியத்தின் கீழ் இயங்க கூடிய தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தின் மூலம் தனிநபர் கடன் பெற கற்பகவிநாயகர் சுய உதவி குழுவின் 25 உறுப்பினர்கள் விண்ணப்பித்திருந்தனர். அப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள். குணசீல ஊராட்சி PLF பொருளாளர் சித்ராவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 8 விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே TNRTP அய்யம்பாளையம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

poster
ukr

மீதமுள்ள 18 விண்ணப்ப படிவங்கள் மாயம் இருக்கின்றது. மாயமான அந்த விண்ணப்பத்தில் புகைப்படங்கள் ஆதார் எண்கள், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இப்படி முழு தகவலும் எழுதப்பட்ட விண்ணப்பங்கள் மாயமாகி இருப்பது சுய உதவிக்குழு பெண்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கடனாளிகள் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் TNRTP -க்கே உள்ளது.ஆனால் TNRTP அலுவலகத்திற்கு எங்களுடைய விண்ணப்பங்களை போய் சேரவில்லை என்பது எங்களுக்கு கிடைக்கக்கூடிய வங்கிக் கடனை தடுக்கும் நடவடிக்கையே, என்று பாதிக்கப்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தகவல் அறிய குணசீலம் PLF பொருளாளர் சித்ரா அவர்களை என் மின் இதழ் தொடர்பு கொண்டது. அது குறித்து அவர்கள் கூறியது. கற்பகவிநாயகர் சுய உதவிக்குழுவினர் தனிநபர் கடன் என்னிடம்தான் மனுக்களை கொடுத்து விண்ணப்பித்திருந்தனர். எங்கள் பகுதியில் பேருந்து வசதிகள் அதிகளவில் இல்லாததால் அய்யம்பாளையம் அலுவலகத்திற்கு நேரில் செல்ல முடியவில்லை. ராஜேஸ்வரி அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் கணக்கெடுப்பவராக இருக்கிறார்.

அவர் நான் டூவீலரில் செல்கிறேன். 25 விண்ணப்பங்களையும் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறி என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால் TNRTP அலுவலகத்திற்கு 8 விண்ணப்பங்களே சென்றுள்ளதாக தகவல் வருகிறது. இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் TNRTP அலுவலகத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி எனக்கு வேறு விவரம் தெரியாது. என்று நம்மிடம் கூறினார்கள்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.