உலக போட்டியில் பங்கேற்க தடை போடும் வறுமை

தவிக்கும் சட்டக் கல்லூரி மாணவி

0
1 full

இந்த சமூகத்தில் பல லட்சங்களை கொட்டி விளம்பரம் தேடும் விளையாட்டு போட்டிகளுக்கும், பல கோடிகளை கொட்டி பணம் சம்பாதிக்கும் பணக்கார விளையாட்டுகளுக்கும் மட்டுமே ஸ்பான்சர் பண்ணுவதற்கு விளம்பர நிறுவனங்கள் முன் வருகிறார்கள்.

ஆனால் தமிழகத்திற்க்கு சொந்தமான பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை ஊக்குவிக்க யாரும் இல்லை என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.

திருச்சி சட்ட கல்லூரியில் 3 ஆண்டு படிக்கும் மாணவி சுபாஷினி. இவர் உலக சிலம்பாட்ட போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டு தன்னுடைய வறுமையும், பொருளாதரம் இல்லாத காரணமாக போட்டிற்கு பங்கேற்பதே கேள்விக்குரியாகும் நிலையில் இருக்கிறார்.

2 full

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சோ்ந்தவா் சுபாஷினி (21). தற்போது திருச்சி சட்டகல்லூரியில் பி.ஏ.பி.எல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதல் தன்னுடைய தந்தை வீரமுருகனிடம் சிலம்பம் கற்றுகொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சுபாஷினிக்கு 2011ஆம் ஆண்டு ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று 1 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்றார். அதோடு உலக சிலம்பாட்ட போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியாக அவரால் பங்கேற்க இயலாமல் போனது.

அடுத்ததாக 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று 1 வெள்ளி பதக்கம் பெற்று உலக போட்டிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் அப்போட்டியையே ரத்து செய்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் 12வது போட்டியை தஞ்சையில் நடத்தியது. அதில் 8 பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 1 நபா் 5 பிரிவில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சுபாஷினி அலங்காரவீச்சு என்ற பிரிவில் தங்கமும், கம்படி பாடம் பிரிவில் தங்கமும், கம்பு சண்டை பிரிவில் தங்கமும், நெடுங்கம்பு வீச்சு பிரிவில் வெள்ளியும், மான்கொம்பு பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று உலக போட்டிக்கு 3வது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வருகின்ற ஜனவரி மாதம் 26 முதல் 31வரை மலேசியா கோலாலம்பூரில் உலக சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க சுபாஷினி மற்றும் அவருடைய தந்தையும், பயிற்சியாளருமான வீரமுருகன் உள்ளிட்ட இருவரும் செல்ல போதுமான உதவி வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வது தன்னுடைய இலக்கு என்கிறார் சுபாஷினி.

நம்ம திருச்சிக்கார பொண்ணு ஜெயிச்சா நம்ம திருச்சிக்கு தானே பெருமை !
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
சுபாஷினி – 9442484642

3 half

Leave A Reply

Your email address will not be published.