திருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் ! நடந்தது என்ன ? வீடியோ

திருச்சியில் சாலையோர பெண்ணிற்கு
நடந்த கேங் ரேப் ! நடந்தது என்ன ?
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு 28 வயதுடைய ஒரு இளம்பெண் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி இரவு சுமார் 11-30 மேல் ஒருவர் போலீஸ் என்று ஒருவர் கூறி இளம் பெண்ணை உய்யக்கொண்டான் ஆற்றங்கரைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அங்கு நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து செப்டம்பர் 18 தேதி அதிகாலை 5:30 மணிக்கு நான்கு நபர்கள் இப்பெண்ணை ஆட்டோவில் அழைத்து வந்து திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனி மதுரம் காம்ப்ளக்ஸ் முன்பு இறக்கி விட்டுள்ளனர்.

இறங்கிய இடத்தில் உள்ள கடை முன்பு கற்பழிக்கப்பட்ட பெண் இரத்தக்கரை ஆடையுடன், உதட்டில் காயத்துடன் அமர்ந்திருக்கின்றார். ஸ்ரீ அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்தி இதை பார்த்து உள்ளார். அலங்கோலமாக இருந்த இளம்பெண் ரத்தக்கறையுடன் உள்ள பச்சை வண்ண சுடிதாருடன் அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. இத்தகவலை அங்குள்ளோரிடம் சொல்லி பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது இலியாசிடமும் கூறியுள்ளார். அதே நேரத்தில் அங்கு உள்ள மொபைல் கடை உரிமையாளர் பாபுவும் இத் தகவலை கூறியுள்ளனர்.
முகமது இலியாஸ் உடனே அரசு அவசர உதவி எண்ணுக்கு போன் செய்ய போன் தொடர்பு கிடைக்கவில்லை. அந்நிலையில் என் திருச்சி டாட்காம் மின்னிதழ் ஆசிரியர் விஜயகுமார் என்ற வெற்றி செல்வனுக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் இருப்பதை அறிந்து பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டு வழக்கறிஞர்கள் காவல் உதவி எண் 100க்கு போன் மூலம் புகாரை பதிவு செய்தனர்.
அதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. என் திருச்சி மின்இதழ் ஆசிரியர் விஜயகுமார் என்ற வெற்றிச்செல்வன் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு 11.30 மீட்டெடுத்தனர். புகாரின் அடிப்படையில் திருச்சி கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம்,உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தனர்.
அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண் பலரால் தான் சீரழிக்கப்பட்டதை கூறினார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.
19 ஆம் தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா பாதிக்கப்பட்ட பெண் குறித்து ஆபீசர்ஸ் காலனி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
செப்டம்பர் 19ஆம் தேதி மாலை அரசு பொது மருத்துவமனை காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பு காவல்நிலையத்தில் விசாரிக்கையில், இப்புகாரை விசாரிக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம் நிலைய ஆய்வாளர் ஜெயாவிடம் நடந்த நிகழ்வினை முதலில் இருந்து கூறினார்கள்.


Ntrichy.com ஆசிரியர் விஜயகுமார் ஆய்வாளர் ஜெயாவிடம் தகவல் அளிக்கையில், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே திறந்தவெளி நூலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் ரத்தக்கரை படிந்த சுடிதாருடன் இருந்தார்.பெண் பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ராவிற்கு தகவல் அளித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம் என்றார்.
பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முகமது இலியாஸ் ஆய்வாளரிடம் கூறுகையில்,
செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை ஸ்ரீ அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்தி மெஸ் அருகில் ஆட்டோவில் நான்கு நபர்களுடன் பாதிக்கப்பட்ட பெண் அலங்கோலமாக ரத்தக்கரை படிந்த சுடிதாருடன் இறக்கி விட்டுச் சென்றனர்.
ரத்த கசிவுடன் கட்டிட படியில் அமர்ந்திருந்து விட்டு அப்பெண் சென்றார். வெல்கம் மொபைல் பாபுவும் இத்தகவலை கூறி உறுதிப்படுத்தினார் அரசு உதவி எண்ணுக்கு தொடர்பு செய்கையில் தொடர்பு கிடைக்கவில்லை. பின்பு Ntrichy.com ஆசிரியருக்கு தகவல் அளித்தேன். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருச்சி புத்தூர் ஒய்எம்சிஏ விளையாட்டு திடல் முன்பு உள்ள மதுரம் காம்ப்ளக்ஸ் இடத்தில் மீட்டெடுத்தோம். அப்போது காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் என்றார்.
என் Ntrichy.com செய்தியாளர் இப்ராஹிம் தகவல் அளிக்கையில் Ntrichy.com ஆசிரியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவரை மீட்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம் என்றார்.
இச்சம்பவம் குறித்து அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள கடைகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உட்பட பலரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் ! நடந்தது என்ன ? வீடியோ
