திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண் கற்பழிப்பு !

0
gif 1

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண் கற்பழிப்பு !

 

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் முன்பு இளம்பெண் இருந்துள்ளார். 17 செப்டம்பர் இரவு சுமார் 11 முப்பது மணிக்கு மேல் போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று உள்ளனர் பின்பு பதினெட்டாம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஆட்டோவில் நான்கு நபர்களுடன் இப்பெண் அலங்கோலமாக அணிந்திருந்த பச்சை வண்ண சுடிதார் ரத்தக்கறையுடன்அம்மன் மெஸ் அருகில் அமர்ந்துள்ளார்.

gif 3

அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது மெஸ்  சமையல்காரர் கார்த்திக் இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர்க்கு தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பாய்ஸ் ஆம்புலன்ஸ் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சங்க செயலாளர் முஹம்மது இலியாஸ் என் திருச்சி டாட்காம் மின்னிதழ் ஆசிரியர் வெற்றி செல்வனுக்கு தகவல் அளிக்க புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு சென்று பார்த்து வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கிறார்கள் முறைப்படி காவல் உதவிக்கு வழக்கறிஞர்கள் 100க்கு போன் மூலம் புகாரை பதிவு செய்தனர்.

 

அதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அந்த இளம்பெண்ணை வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் மீட்டெடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

அதைத்தொடர்ந்து கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம்,உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

 

gif 4

அப்பெண்ணிடம் விசாரிக்கையில், பெற்றோர்கள் திருச்சி காட்டூர் பகுதியில் இருந்ததாகவும்  தனது தாய் தந்தை எனவும் தற்போது அவர்கள் இல்லாமல் பாட்டி  ஆதரவுடன் இருப்பதாக கூறுகிறார். மேலும் இளம்பெண் அத்தை வீட்டில் நகை பணம் எடுத்ததாகவும் சொல்லியுள்ளார்.

 

அதேநேரத்தில் மணப்பாறை வடக்குப்பட்டி சேர்ந்த மணிகண்டன் உடன் இருந்திருக்கின்றார். இவர்களுடன் சேலம் ஜாமியா மஸ்ஜித் பின்புறம் வசித்து வரும் சாதிக் மும்தாஜ் தம்பதியினர் இருந்து உள்ளார்கள்.

 

இவர்கள் நால்வரும் மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனை முன்பு உள்ள திறந்தவெளி நூலகம் முன்பு உணவு உண்டு இருக்குமிடத்தில் தூங்கிவருகிறார்கள்.

 

நுண்ணறிவு போலீசார் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து தகவல் கேட்டுள்ளார். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா ஏதேனும் இருப்பின் அதன் பதிவுகளை பார்ப்பதாக கூறியுள்ளார் வெற்றிவேல் முருகன் ஸ்டோர் அருகில் கண்காணிப்பு கேமரா உள்ளதில் பதிவு பார்க்க வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் பெண் காவலர்கள் அந்த இளம்பெண்ணை மீட்டெடுத்து மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அவருடன் இருந்த மணப்பாறை மணிகண்டன் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

 

இளம்பெண் போலீஸ் என்று கூறி தன்னை கூட்டி சென்று நான்கு நபர்கள் இரவு கழுத்தை பிடித்து  சீரழித்து விட்டதாக கூறினார்.

இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.