பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம் திருச்சி மாநகர/ மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வு

0
full

“பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம்” திருச்சி மாநகர/ மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வு

half 2

திருச்சி மாநகர காவல்துறை கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த துண்டு பிரசுரம்,ஸ்டிக்கர் ஆகியவைகளை காவல் ஆய்வாளர் அருள்ஜோதி அவர்கள் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

poster

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முரளி மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 பெண்களுக்கான இலவச தொலைபேசி எண்கள் 181, 1091 ,குழந்தை திருமண தடுப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ,குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் ,வரதட்சணை தடுப்புச் சட்டம் ,ஒருங்கிணைந்த சேவை மையம் குறித்து பயணிகளுக்கு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.