முன்னாள் படைவீரர் வாரிசுதார்களுக்கு கல்வி உதவித்தொகை:

0
1

முன்னாள் படைவீரர் வாரிசுதார்களுக்கு கல்வி உதவித்தொகை:

தொழிற் கல்லூரிகளில் பயிலும் முன்ளாள் படைவீரர்களின் வாரிசுதார்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

2020-21 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிஇ, பிடெக், பிடிஎஸ், பிஎட், பிபிஏ, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, எல்எல்பி, எம்சிஏ, எம்பிஏ, பிவிஎஸ்சி, பிஎஸ்சி அக்ரி, பிபிஎம், பிஎஸ்சி பயோடெக் பி.ஆர்க், பிஎஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட தொழிற் கல்விகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர் மாணவிகள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை டிசம்பர் 30க்குள் உரிய இணைப்புகளுடன் ஆன்லைன் மூலம் அனுப்புமாறு புதுதில்லியிலுள்ள மத்திய முப்படைவீரர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.