திருச்சியில் காவலர் தற்கொலை:

0
full

திருச்சியில் காவலர் தற்கொலை:

ukr

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் அழகர்சாமி (வயது 33). இவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில்  வேலைபார்த்து வந்தார். இவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் அழகர்சாமி வசித்த வீட்டில் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை முடிவை எடுக்கிறேன்‘ என கூறப்பட்டிருந்தது.

இதன் மூலம் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் அழகர்சாமிக்கு 33 வயதாகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை. எனவே, திருமணம் ஆகாத ஏக்கமா என்பது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.