திருவரங்கம் சரிதம்

எதிரிகளை நடுங்க செய்த அரங்கனின் காவல்தெய்வம்

0

ஸ்ரீரங்கம் கோவில் கோட்டை உள்ளே சுமார் 3000 குதிரை மற்றும் 10–15,000 படை வீரர்கள் வைத்திருந்த நந்திராஜா என்கிற மைசூர் படை வீரர்களை சுமார் 1000 பேர் கொண்ட ஒரு நான்கு, ஐந்து பீரங்கி கொண்டு தாக்க ..வெள்ளைகாரன் மற்றும் நவாப் முஸ்லிம் படைகள் தங்கி இருந்த சத்திரம் பற்றி பார்த்தோம்

அன்று ஆற்காடு நவாப் படைகள் சீரங்கம் அம்மாமண்டபம் சாலைக்கு கீழ்புறம் இருந்த இடம்!! அந்த இடத்திற்கு சாலையின் மேற்குபுறம் இருக்கும் இடம், அன்றைய சந்திரிகா கல்யாண மண்டபம் கேப்டன், டால்டன் தங்கி இருந்த இடம்  இதை அதே இடத்தில் இந்த சரித்திர பதிவை எழுதி கொண்டு இருக்கிறேன்!!!

1752, 24 டிசம்பர் அன்றைய காலகட்டத்தில் துலுக்கன் படைகள் மைசூர் படைகளின் எண்ணிக்கையை பார்த்து திருச்சி பகுதிக்கு ஓட ஆரம்பித்தார்கள் என்று பார்த்தோம்..

மைசூர் படைகள் டால்டன் தங்கி இருந்த கல்யாண மண்டபத்தை அடைந்து அங்கு இருந்த வெள்ளைகாரர்களையும் காசுக்கு சண்டை போடும் அன்றைய சிப்பிகளையும் சீவி எறிந்தனர் .. இதற்கு காரணம் .. முட்டாள் டால்டன் … மிக பிரமாண்ட ஸ்ரீரங்கம் கோட்டையை வெறும் 1000 பேர் மற்றும் நான்கு பீரங்கி கொண்டு தாக்கி பயமுறுத்தி விட முடியும் என்று நினைத்தது !!

அவன் இவர்கள் நவாப் படைகளை ஒரு 500 அடியில் நேருக்குவதை பார்த்தவுடனே திருச்சி பகுதிக்கு தப்பி ஓடி விட்டான் ..

food

இதில் ஓடி போனவன் டால்டன் ஆனால் அதை மாற்றி எதோ ஒரு அதிகாரி ஓடியது போல மாற்றி எழுதி இருக்கானுங்க காரணம் .. பின்னாளில் முதல் முதல் பிரமாண்ட காவேரி பாலம் கட்டியது போது 1845ல் அதற்கு டால்டன் என்கிற முட்டாள் கோழை ராணுவ வீரனுடைய பெயரிட்டு  எதிரியின் ஆயிரம் படை வீரர்கள் தப்பி காவேரி கரையை நோக்கி ஓடுகிறார்கள் என்கிறபோது நான் கற்பனை செய்கையில், 3000 குதிரை வீரர்கள் இன்றைய ராஜகோபுர வாசல் வழியாக புயல் போல கிளம்பி இன்றைய அம்மாமண்டபம் சாலையில் ஒரு 15 பேர் தப்பி போனவர்களை தவிர ஒரு 800–900 ஆட்களை வெட்டி கொன்றார்கள்!!!

ஆம் அன்பர்களே ஸ்ரீரங்கம் அரங்கன் கோவில் முன்பாக இருக்கும் பிரதான சாலையான – ராஜகோபுரம்- அம்மாமண்டபம் வரை இருக்கும் சாலையில் சுமார் ஆயிரம் பிணங்கள் ஒரே இரவில் கிடந்த ரத்த பூமி இது!!! அதில் வெள்ளைகார நாய்களும் உண்டு!! டால்டன் காலை வரை காவேரியின் கரையில் காத்திருந்து பல வெள்ளைகார்களின் பிணங்களை அள்ளி சென்றான் ..

காலையில் நடந்த கூட்டத்தில் எல்லாரும் ஒரே பதிலை சொன்னார்கள் .. ஏண்டா ஓடினீங்க .. தெரிலீங்க .. கையில் தான் நிறைய பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் இருக்கே, ஒரு பயலும் அடியும் படவில்லை, சண்டையே ஆரம்பிக்கவில்லை !!! (சண்டையில் குண்டுகள் தீர்ந்தால் மட்டுமே திரும்பி ஓடுவார்கள்!

எதிரிபடைகளை நடுங்க செய்தவன் அரங்கனின் காவல் தெய்வம்தான் .. என்பதை நாம் இன்று அறிவோம்!!! சண்டையே ஆரம்பிக்கும் முன்னமே புறமுதுகு இட்டு ஓடி அவர்களே செத்தார்கள் !!! அவரே இன்று ராஜகோபுரம் உள்ளே குடிகொண்டு அரங்க மாநகரை காக்கும் நமது ஸ்ரீரங்கம் கோட்டை முனி!!!!!

அன்று ஸ்ரீரங்கம் உள்ளே இருந்த மைசூர் படை வீரர்கள் அடைய வலஞ்சான் வீதி முழுவதும் தங்கி இருந்த பொது பல இடங்களில் தாங்கள் தெய்வங்களை வைத்து வழிபட்டதை தொடர்ந்து காணுவோம் !!!

gif 4

Leave A Reply

Your email address will not be published.