மணப்பாறையில் இன்சூரன்ஸ் போட சொல்லி வாடிக்கையாளரை மிரட்டிய வங்கி மேலாளர்

மணப்பாறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர் பட்டபாடு...

0
full

விக்னேஷ் என்பவர் மணப்பாறை உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் அக்கௌன்ட் நம்பர் 73 இன்று முடியும் வங்கிக் கணக்கை வைத்து வைத்திருக்கிறார். அந்தக் கணக்கில் 22,000 ரூபாய் தொகையும் உள்ளது. இந்நிலையில் மூன்று வருடங்களாக அந்த வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை ஏதும் செய்யாததால். ஒரு வருடத்திற்கு முன்பாக வங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. பிறகு விக்னேஷ் அவர்கள் சென்று வங்கி மேனேஜரிடம் கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு வங்கி கணக்கு இயங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருப்பதால், வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காகவும். பரிவர்த்தனை சம்பந்தமாகவும் கடந்த ஜுன் மாதம் விக்னேஷ் வங்கிக்கு சென்று தனது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்பொழுது மீண்டும் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. என்று வங்கி பணியாளர் குறிப்பிடுகிறார். மேலும் நீங்கள் உடனே மேலாளரை சந்தித்து தகவல் தெரிவியுங்கள் சரி செய்வார் என்று கூறியிருக்கிறார்கள்.

விக்னேஷ் மேலாளரை சந்தித்து இருக்கிறார். அப்போது வங்கியின் மேலாளர் விக்னேஷிடம் ஒருசில படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி செய்து தருமாறு குறிப்பிட்டிருக்கிறார். அந்த படிவங்கள் பூர்த்தி செய்ய தெரியாததால் விக்னேஷ் அன்று வீட்டிற்கு சென்றுவிட்டு. பிறகு மீண்டும் இரண்டு முறை வங்கிக்குச் சென்று மேலாளரை சந்தித்து வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலாளரும் கண்டிப் பாக நான் கொடுத்த இன்சூரன்ஸ் காண படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வங்கி கணக்கை இயக்க அனுமதிப்பதாக கூறியிருக்கிறார்.

poster

பிறகு மீண்டும் கடந்த மாதம் வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து தற்போது உள்ள நிலையில் எனக்கு இன்சூரன்ஸ் போடும் அளவிற்கு வருமானம் இல்லை. இன்சூரன்ஸ் போட்டாலும் மாதமாதம் கட்ட முடியாது. எனவே எனது வங்கிக் கணக்கை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று விக்னேஷ் வங்கி மேலாளரிடம் கூறியிருக்கிறார்.

வங்கி மேலாளர் ஒரு இன்சூர ன்ஸ் கூட போட முடியவில்லை என்றால் உனக்கெல்லாம் எதற்கு அக்கவுண்ட். அக்கவுண்ட் கிளோஸ் செய்துவிட்டு போக வேண்டியதுதானே என்று கூறியிருக்கிறார்.

விக்னேஷ் அதன்பிறகு சரி என்னுடைய அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்து தாருங்கள். எனக்கு இன்சூரன்ஸ் போடும் அளவிற்கு தற்போதைய வருமானம் இல்லை என்று கூறியிருக்கிறார்‌. மேலாளரும் கடிதம் எழுதிக் கொடு, அக்கவுண்ட் க்ளோஸ் செய்து தருகிறேன். என்று கூற, விக்னேஷ் உடனடியாக கடிதத்தையும், வங்கி புத்தகத்தையும் மேனேஜரிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட மேலாளர், ஏடிஎம் கார்ட் இனி அடுத்து வரும் வேலை நாட்களில் கொண்டு வந்து கொடு அக்கவுண்டை க்ளோஸ் செய்து, மீதமுள்ள பணத்தை பெற்றுக் கொள் என்று கூறி இருக்கிறார். அதற்கு சம்மதித்து விக்னேஷ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ukr

ஆகஸ்ட் மாத இறுதியில் விக்னேஷ் தனது ஏடிஎம் கார்டு வங்கி வசம் ஒப்படைத்திருக்கிறார். வங்கிப் பணியாளர்கள் மதியம் இரண்டரை மணிக்கு மேல் வாருங்கள் என்று விக்னேஷிடம் கூற விக்னேஷ் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பிறகு இரண்டு முப்பது மணிக்கு மேல் மீண்டும் வங்கிக்குச் சென்று இருக்கிறார்.

வங்கி பணியாளர்கள் உனது கணக்கு 22,000 ரூபாய் இருக்கிறது. நாங்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணமாக கொடுக்க முடியும். எனவே உங்கள் பெயரில் உள்ள வேறு ஏதேனும் வங்கி கணக்கு விவரங்களைத் தாருங்கள் நாங்கள் செக்காக தருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.
அதற்கு விக்னேஷ் எனக்கு இந்த வங்கியைத் தவிர வேறு வங்கிக் கணக்குகள் இல்லை. எனவே எனது அக்கவுண்டில் க்ளோஸ் செய்து பணத்தை திருப்பி தாருங்கள் என்று அன்றே பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.

எனவே கடந்த 4ம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார். அந்த மனுவை ஒரு பெண் அதிகாரி பெற்று புகார் மனுக்கள் எல்லாம் வேண்டாம் நான் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறிவிட்டேன். உங்களுடைய அக்கவுண்ட் குளோஸ் செய்து உங்களுடைய தொகையும் திருப்பித் தரப்படும் என்று கூறியிருக்கிறார்.

அதனடிப்படையில் 5ம் தேதி காலை வங்கிக்குச் சென்று விக்னேஷ் மேலாளரை சந்தித்திருக்கிறார். அப்போது விக்னேஷை கண்டதும்ஆத்திரமுற்ற வங்கி மேலாளர் விக்னேசிடமிருந்து வங்கி சம்பந்தமான படிவங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, உனது அக்கவுண்ட் க்ளோஸ் செய்து தர முடியாது, ஓபனும் செய்து தர முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள் என்று மேலாளர் விக்னேஷை பார்த்து கூறியதாகவும். இதனால் நான் செய்வதறியாது மனவேதனையுடனும், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் நிலையில் அந்த பணம் கைக்கு வராததால் மேலும் சிரமம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் கடந்த 7ம் தேதி மண்டல அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது உங்கள் கணக்கு தற்போது முடக்கப்படவில்லை என்று கூறினார்கள். எனக்கு வங்கியில் என்ன நடக்கிறது என்று உண்மை நிலை விளங்கவே இல்லை. எனது பணம் திரும்பி வருமா வராதா என்ற வேதனை தான் உள்ளது என்று இவ்வாறாக என் திருச்சி இதழுக்கு விக்னேஷ் கூறினார்.

மேலும் இது சம்பந்தமாக தகவலை அறிய சம்பந்தப்பட்ட மணப்பாறை கைப்பேசி எண்ணை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலைப்பேசி என்னன 920 இன்று முடியும் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் பெற முயற்சித்தோம். யாரும் பதில் பேசவில்லை.

half 1

Leave A Reply

Your email address will not be published.