ஆசிரியர்களே சமூகத்தின் மாற்றங்கள்

0
Business trichy

திருச்சி பெரியகடைவீதி, வெள்ளை வெற்றிலைக்கார தெருவில் அமைந்துள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு இருந்த நிலை, தற்போது இருக்கும் நிலை ஆச்சரிய படுத்துவதாக உள்ளது.
அதைப்பற்றி தேடி அந்தப் பள்ளிக்குச் சென்றபோது 2010ம் ஆண்டிற்கு முன்பு அந்தப் பள்ளியில் வெறும் 21 மாணவர்களை கொண்டு மட்டும் இயங்கிக்கொண்டிருந்த அந்த கல்வி நிலையம் தற்போது 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று இருக்கின்றனர்.
அன்று போதிய மாணவர்கள் இல்லை, சரியான கட்டிட வசதி இல்லை என்று கைவிடப்படும் நிலையிலிருந்த அந்தப் பள்ளியின் தற்போதைய நிலையை மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதன் மூலம் அறியமுடிகிறது.
இத்தனை மாற்றமும் அத்தனை எளிதல்ல, அந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டிய அந்த ஆசிரியரை அடையாளப்படுத்துகிறது என் திருச்சி.காம்.


அவர்தான் அந்தப் பள்ளியின் தலைமை யாசிரியர் பா.ரெஹ்னா பேகம். இவர் 2010ம் ஆண்டு இந்த பள்ளிக்கு ரெஹ்னா பேகம் தலைமையாசிரியராக வருகையில், வெறும் 21 பள்ளி மாணவர்களை கொண்டு இயங்கி வந்த பள்ளி தற்போது 120க்கும் மேற்பட்ட தலைவர்களை உருவாக்கி வருகிறது. மேலும் அந்த பள்ளியின் உடைய கட்டமைப்பும் மேம்படுத்தபட்டிருக்கிறது. தலைமையாசிரியர் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி மாணவர்களை ஆங்கில பேச்சாளர்களாக உருவாக்கி வருகிறார்.

loan point
web designer

பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி சாய்னா என்பவர் சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் அந்த பள்ளிக்கு பணியாற்ற வரும் பொழுது கட்டிட வேலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணியை துரிதப்படுத்தி மேலும் பல்வேறு உதவிகளை பெற்று அந்தப் பள்ளியை உயர்த்திக் காட்டியிருக்கிறார் தலைமையாசிரியை.

nammalvar

ரோட்டரி சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவி மற்றும் தலைமை யாசிரியரின் முயற்சியின் மூலமாக அந்த பள்ளி தற்போது தொடர்ந்து இயங்கி கொண்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலில் கூறியது போல ஆசிரியர் பணி என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பணி என்பதை ஆசிரியர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்‌. பா.ரெஹ்னா பேகம் போன்ற ஆசிரியர்களே சமூகத்தின் மாற்றங்கள். ஆசிரியர்களைப் போற்று வோம். கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உதவுவோம்.

– இப்ராஹிம்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.