டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் கோரிக்கை மனு

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் கோரிக்கை மனு
திருச்சி திருவெறும்பூர் அரியமங்கலம் உய்யகொண்டான் கரையை ஒட்டி புதிதாக டாஸ்மாக் கடை10214 திறக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு அளித்த பெண்கள் பேசுகையில்,
திருச்சி திருவரம்பூர் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரைப் பகுதியில் டாஸ்மாக் கடை எண்10214 கடை வருவது அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நஜிரான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு 2017ஆண்டு மனு அளித்தார்.
முதல்வர் தனிப்பிரிவில்
17 – 3 – 2017 தேதி மனு எண்
33570/2017 பதிவு செய்யப்பட்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என மனு நிராகரிக்கப்பட்டது.
19-3-20 தேதியிலும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மது கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில்17-9-20மாலை திடீரென டாஸ்மாக் கடை எண்
10214 உய்யகொண்டான் ஆற்றின் கரை அருகே திறக்கப்பட்டது.


இதுகுறித்து ,
பெண்கள் மற்றும் பொதுமக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அரியமங்கலம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். புகார் மனுவில் கூறியிருப்பதாவது திருச்சி
தஞ்சை சாலையில் உள்ள SIT to அரியமங்கலம் பாதையில் உய்யக்கொண்டான் பாலம் 200 மீட்டர் மேற்குப் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறந்து உள்ளனர் எங்கள் கிராமத்தில் மது கடை ஏதும் திறப்பதற்கான முயற்சிகள் ஏதும் இல்லை என 17.3.17தேதி முதல்வர் தனிப்பிரிவில் விளக்கம் அளித்து மனு நிராகரிக்கப்பட்டது இந்நிலையில் புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் பேசுகையில், மதுக்கடைக்கு மாநகராட்சியின் உரிமம் பெற்று கட்டப்படவில்லை. திடீரென கட்டப்பட்ட கடையில் மதுக்கடையினை பிறந்து கிராவல் மண் கொட்டப்பட்டு வழி நெடுக டியூப்லைட் கட்டி உள்ளனர்.ஐந்து வருடங்களாக புதிய கடைகள் வரும் என்ற செய்தி அறிந்து தொடர்ந்து நாங்கள் முதல்வர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடை திறந்து உள்ளார்கள். இதனால் அப்பகுதி மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் மட்டுமின்றி அரியமங்கலம், கல்லாங்குத்து, குவளக்கொடி, ஒட்டகுடி, முல்லைக்குடி ஆகிய ஊர்கள் வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும்.
மது அருந்துபவர்கள் மது போதையில் சாலையில், பாட்டிலை உடைத்து, இரவு நேரங்களில் அட்டகாசம் செய்வர்.10214 டாஸ்மாக் கடையை அகற்றி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
