பேஸ்புக் பார்க்கும் சபலிஸ்ட்களே -உஷார்

இப்படியும் இருக்கு ஆபத்து

0
1

கடலூர் மாவட்டத்தில் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர், பண்ருட்டியில் பிளக்ஸ் பேனர் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், திருச்சி காஜாமலை நசீர்அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா வுக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சில ஆசை வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டு வினோத்குமாரை தனது வலையில் விழச் செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சொகுசு மோட்டார் சைக்கிளில் வினோத்குமார் சில தினங்களுக்கு முன் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே காத்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றனர். பின்னர், திருச்சி சங்கம் ஓட்டல் அருகே வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வினோத்குமாரை அடித்து சித்ரவதை செய்தனர்.

ஒரு லட்சம் இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையேல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், என்னிடம் பணம் ஏதும் இல்லை. ரகமத்நிஷா அழைத்ததால்தான் வந்தேன் என கூறி இருக்கிறார். பின்னர் அக்கும்பல் அவரது ஏ.டி.எம்.கார்டை பிடுங்கி, எவ்வளவு பணம் இருக்கிறது? என சோதித்து பார்த்தனர். அதில் தொகை குறைவாக இருந்துள்ளது. உடனே, அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் அவரை விட்டுசென்றனர்.

2

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காஜாமலையை சேர்ந்த இளம்பெண்ணான ரகமத்நிஷாவை 7 பேர் கும்பல் முகநூல் மூலம் ஆபாசமாக பேச வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரகமத்நிஷா உட்பட 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.