திருச்சியில் தரைக்கடை வியாபாரிகளுக்கு கடன் உதவித்தொகை:

0
1

 

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகளுக்கு கடன் உதவித்தொகை:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளான தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகள் சுயசார்பு நிதியில் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

2

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் எஸ்.சிவராசு பேசியதாவது:

தரைகடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகள் சுயசார்பு நிதியில் வங்கிகள் மூலம் தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட தரைக்கடை மற்றும் தள்ளு வண்டி வியாபாரிகளிடமிருந்து மாநகராட்சியின் மூலம் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு அனைத்து வங்கிகளும் விரைவில் கடன் வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தி கூடுதலான மனுக்களை பெற வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  கடன் பெற விரும்பும் வியாபாரிகள் அந்தந்த பகுதியிலுள்ள மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்களையும் அணுகி மனு அளிக்கலாம்.  கடன் பெற்றவர்கள் ஒரு வருட காலத்திற்குள் அதனை திரும்ப செலுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.