திருச்சியில் கே.என்.நேரு பேட்டி:

0
Full Page

திருச்சியில் கே.என்.நேரு பேட்டி:

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வளித்தது பெரியாரின் கொள்கைகளே. அவற்றை மனதில் ஏந்தி அதன்வழி நடப்போம் என அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.திமுக சாா்பில் அவரின் கொள்கைகளைத் தவறாது கடைப்பிடித்து வருகிறோம். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக இந்தியா முழுக்க தனது கைகளில் இருப்பதாக நினைத்துச் செயல்படுகிறது.மக்களுக்குத் தேவையான கொள்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்தால் மிரட்டும் நடவடிக்கையைத் தொடா்கிறது. சினிமா நடிகா்கள் கருத்து தெரிவித்தால் தங்கள் வசமுள்ள வருமான வரித்துறை மூலம் மிரட்டுகிறது.

Half page

ஹைட்ரோகாா்பன், மீத்தேன், நீட் தோ்வு என அனைத்து விவகாரங்களிலும் திமுகவைக் குற்றம் சாட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனா். திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கான ஆய்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஸ்டொ்லைட் ஆலை அமைக்க அதிமுக ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதில்லை.

மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டு தடைக்கு விலக்கு பெற்றதைப் போல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வுக்கும் விலக்கைக் கேட்டுப் பெறுவோம்.சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினா் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே வெளியே வருகின்றன. எதிா்க்கட்சித் தலைவா் கூறும் கருத்துகள் எதுவும் வருவதில்லை. இதை மக்கள் மன்றத்தில் தெரிவிப்போம்.கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் முறைகேடாகப் பெற்ற நிதியை மீட்டு அதை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.