இன்னொரு அரியமங்கலம் குப்பை கிடங்கு ஆகிறதா காந்தி மார்க்கெட் பகுதி

0
Business trichy

இன்னொரு அரியமங்கலம் குப்பை கிடங்கு ஆகிறதா காந்தி மார்க்கெட் பகுதி

திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் கிழக்குப் பகுதி முழுக்க சேகரிக்கப்பட்ட குப்பைகள் வாழைக்காய் மண்டியில் முதலில் கொட்டப்பட்டு பிறகு அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு பெரிய கனரக வாகனங்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.

loan point
web designer

இந்த நிகழ்வு கடந்த 8 மாதங்களாக இருப்பதாகவும். இதுகுறித்து மக்கள் கேட்கும் பொழுது இது தற்காலிகமான செயல்பாடுதான் இது மாற்றியமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் இங்கு குப்பைகள் கொட்டிவிட்டு மட்டும் சென்று விடுகின்றனர். இப்போது இது மினி குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது.

nammalvar

அது பொது மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து AISF அமைப்பினரும் மற்றும் அந்த பகுதி பொது மக்களும் இன்று காலை குப்பைக் கிடங்கு பகுதியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சீர் செய்து தரப்படும் என்று கூறியதன் அடிப்படையில் முற்றுகையிட்டவர்கள் கலைந்து  சென்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.