திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை நீட்டிப்பு:

0
Full Page

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை நீட்டிப்பு:

திருச்சி காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.  திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்படுகிறது. காந்தி மார்க்கெட்டை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஏற்கெனவே பல கோடி ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் புதிய மார்க்கெட் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. எனவே காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதித்து, கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Half page

.இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்கப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் காந்தி மார்க்கெட்டை செப். 28-ல் திறக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது, எனவே, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து காந்தி மார்க்கெட்டை திறக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து, விசாரணையை அக். 13-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.