விவசாயிக்கு லோன் இல்லன்னு சொல்றதுக்கு இதெல்லாம் காரணமா ? வஞ்சிக்கும் திருச்சி ஆந்திரா வங்கி மேனேஜர்

விவசாயிக்கு லோன் இல்லன்னு சொல்றதுக்கு இதெல்லாம் காரணமா ? வஞ்சிக்கும் திருச்சி ஆந்திரா வங்கி மேனேஜர்
எனது பெயர் ராஜ மோகன் நான் கே கே நகர் பகுதியில் வசிக்கிறேன். நான் கேகே நகர் ஆந்திரா வங்கியில் வங்கி கணக்கு வைத்து இருக்கின்றேன். சரிவர கணக்கை பராமரித்து வருகிறேன். வங்கி மூலமாக வண்டி லோன் போன்ற லோன் முறையாக கட்டி வருகிறேன். என்னுடைய வங்கி பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொண்டு வருகிறேன்.
மேலும் நான் இரண்டு வருடங்களாக வருமான வரியுள் கட்டி இருக்கின்றேன். இந்த வருடமும் வருமான வரி கட்ட இருக்கிறேன். இப்படியான முறைப்படியான வங்கி செயல்பாடுகள் உள்ள நிலையில் தான், தான் ஆந்திரா வங்கியில் கிசான் லோன் பெற ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்து இருந்தேன்.

லோன் பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையான ஆவணங்களையும் இணைத்து தான் லோனுக்கு விண்ணப்பித்திருந்தேன்.மேலும் என்னிடம் 25 ஆடு, 30 நாட்டுக்கோழி, 12 பசுமாடுகள் 6 கன்றுக்குட்டிகள் மேலும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் மருத்துவ சான்று பெற்றிருக்கிறேன். அத்துடன் ஆட்டிற்கும் மாட்டிற்கும் இன்சூரன்ஸ் செய்து இருக்கின்றேன்.
இப்படி முறையான கணக்கு விவரங்களை காட்டியும் ஒரு மாத காலமாக கிசான் லோன் தராமல் ஆந்திரா வங்கியின் மேனேஜர் இழுததடித்து வருகிறார். பலமுறை வங்கிக்குச் சென்று கேட்டும் முறையான பதில் இல்லை. அப்படிப் பேசினாலும் I will call back என்று கூறி அனுப்பி விடுகிறார்.



கிசான் லோன்னின் மூலம் நான் இரண்டு லட்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். முறையான ஆவணங்கள் முறையான காரணங்கள் இருந்தும் ஒரு மாதமாக ஆந்திரா வங்கி கேகே நகர் கிளை அலைந்து, அலைந்து மனமே வெறுத்து விட்டது.
மேலும் வங்கி சென்றாளே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு தான் மேனேஜரை சந்திக்க அனுமதிக்கின்றனர். மேனேஜரும் “ஐ வில் கால் பேக்” என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி அனுப்பி விடுகிறார். என்று என் திருச்சி மின் இதழுக்கு கூறினார்.
விவசாயிக்கு விவசாய லோன் கொடுக்க இப்படி யோசிக்கும் வங்கிகள். கோடி கோடியாக கொள்ளை அடித்து விட்டு வெளிநாடு தப்பிச் செல்லும் பெரிய முதலாளிகளுக்கு எதன் அடிப்படையில் வங்கிக் கடன் இருக்கின்றனர். கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கு எளிதாக கிடைக்கும் வங்கி கடன் ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில் இவ்வளவு சிரமம்.
மேலும் இது பற்றி அறிய வங்கி மேனேஜரின் தொலைபேசி எண்ணான 728 என்று முடியும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கருத்தை பெற முயற்சித்தும். ஆனால் அழைப்பை யாரும் ஏற்கவில்லை.
