திருச்சியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்:

திருச்சியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்:

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்தநிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில், அக் கட்சியின் முதன்மைச் செயலர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார், மாநகரச் செயலாளர் மு. அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
