மணப்பாறைக்கு அரசு கல்லூரி, வலுக்கும் கோரிக்கை

0
1

மணப்பாறைக்கு அரசு கல்லூரி, வலுக்கும் கோரிக்கை.

திருச்சி வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் மிக முக்கியமான நகரமாக உள்ளது. மக்கள்தொகையும் மக்களுடைய தேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் திருச்சி புறநகர் பகுதியான மணப்பாறைக்கு ஒரு அரசு கல்லூரி கேட்கும் கோரிக்கையானது சமீப காலங்களில் வலுவடைந்து வருகிறது.

மணப்பாறை பகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரி இல்லாததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு திருச்சி மாநகரில் உள்ள கல்வி நிலையங்களையே தேர்வு செய்கின்றனர்.

2

அப்படி வரும் மாணவர்களிடம் கேட்கும்பொழுது பஸ்ஸில் வரும் பொழுது பணம் அதிகம் செலவாகிறது அதனால் நாங்கள் எங்கள் பயணத்திற்கு இரயிலையே தேர்வு செய்கிறோம். இரயிலில் மாதத்திற்கு ஒரு முறை பாஸ் பெற்றுக் கொள்வதன் மூலம் ரயில் கட்டண தொகையில் பாதி மட்டுமே செலவாகிறது. இதன் மூலம் போக்குவரத்து செலவு குறைகிறது ஆகவே இரயிலையே தேர்வு செய்து வருகிறோம். ஆனாலும் இரயில் சில நேரங்களில் தாமதமாகிவிடும் அதனால் கல்லூரிக்கு தாமதமாகத் தான் செல்ல முடியும். மதியம் ரயிலை விட்டு விட்டோம் என்றால் மாலை வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

தினமும் 40 கிலோ மீட்டர் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கிருந்து தினமும் திருச்சி மாநகரில் உள்ள கல்லூரிகளுக்கு படிக்க வருகின்றோம். அரசு இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக மணப்பாறை பகுதிக்கு அ

மணவை தமிழ் மாணிக்கம்

ரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்பது அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது என்று மாணவர் கூறினார்.

மேலும் மதிமுகவின் முன்னாள் மாணவர் அணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டுமென்று இணையவழி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக பல்வேறு அரசியல் கட்சியினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ் மாணிக்கத்தின் கருத்து திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்து பெரிய நகரம் மணப்பாறை . மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மணப்பாறை வட்டம் , மருங்காபுரி வட்டம் என இரண்டு

 

சட்டமன்றத் தொகுதி வட்டங்கள் உள்ளது. மணப்பாறையில் கிராமப்புற அப்பகுதி மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதியின் மக்கள் அதிகம் வசிக்கும் இடம் உள்ளது. இந்தப் பகுதியில் கல்லூரி இல்லாததால் மாணவர்கள் திருச்சி மாநகர பகுதியில் அமைந்து இருக்கக் கூடிய கல்வி நிலையங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர். எனவே இங்கு அரசு கல்லூரி அமைத்து மாணவர்கள் பயன் பெற வழிவகை செய்ய வேண்டும். மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மற்றும்

ட்டமன்ற உறுப்பினருக்கும் கோரிக்கைகள் பலமுறை வைத்திருக்கிறோம் என்று நம்மிடம் கூறினார்.

மேலும் தொட்டியம் ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தொட்டியம் பகுதிக்கு அரசுக் கல்லூரி கேட்டு முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.