திருச்சி  மாவட்டத்தில் (16.09.2020)  நேற்று  98  பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் பலி

0
gif 1

 

gif 4

திருச்சி  மாவட்டத்தில் (16.09.2020)  நேற்று  98  பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் பலி

திருச்சி மாவட்டத்தில் (16.09.2020)  நேற்று வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 98 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 9,114 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றில் புதன்கிழமை குணமான 50 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,113 ஆக உள்ளது. திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவால் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டு உயிரிழந்த 70 மற்றும் 61 வயது ஆண் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136 ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் 867 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.