திருச்சியில் தி.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல்:

திருச்சியில் தி.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சேங்குடியைச் சோ்ந்த அ. மூக்கன் (70), அந்த பகுதி திமுக முன்னாள் கிளைச் செயலா்.புதன்கிழமை மாலை அங்குள்ள 40 அடி உயர நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி நின்று நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டாா்.இதைத் தொடா்ந்து அங்கு வந்த உறவினா்கள், போலீஸாா், திமுகவினா் மூக்கனை சமரசம் செய்து கீழே இறக்கி கொண்டு வந்தனா்.தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா தலைமையிலான போலீஸாா் மூக்கனிடம் விசாரணை நடத்தினா்.
