திருச்சியில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி:

0
D1

திருச்சியில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி:

N2

திருச்சி பழைய பால்பண்ணை அருகே சவுபாக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் கோவாஸ், இவர் தனியார் நிறுவனத்தில் தலைமைக் கணக்காளராக பணிபுரிகிறார். இவரது மகன் ஜோசல் டெய்சன் (4) . இவா்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஒருவரது வீட்டில் புதன்கிழமை இரவு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோவாஸ் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டாா்.

அப்போது மாடியின் வெளிப்புறத்தில் தொங்கிய பலூனை பால்கனி வழியாக பிடிக்க முயன்ற ஜோசல் டெய்சன் கால் தவறி முதல் தளத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்தாா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த  காவல் துறையினா் சிறுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.