திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல்:

0
1 full

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல்:

திருச்சி, தென்னூர் அண்ணாநகர் பகுதியில் சரக்கு வேன் ஒன்றில், ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தவிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சரக்கு வேன் அங்கிருந்து காவிரி பாலம் நோக்கி செல்வது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து காவிரி ஆற்றுப்பாலத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற சரக்கு வேனை மடக்கி பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது, சுமார் 2,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் கோழிப்பண்ணைகளில் வழங்கப்படும் கோழித்தீவனம் தயாரிக்கவும், சிறிய ஓட்டல்களில் முறுக்கு போட்டு விற்பனை செய்யவும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி டிரைவர் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த அய்யப்பன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.