
திருச்சியில் போலி டாக்டர் கைது:

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேப்பந்துறை பகுதியில் வசிக்கும் 19 வயதான பெண் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தார். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் ராஜி என்ற பெண் டாக்டர் கருக்கலைப்பு செய்துள்ளார். 10-ம்வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு போலியாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.இந்தநிலையில் சரியான முறையில் கருக்கலைப்பு செய்யாததால் 19 வயதான பெண்ணுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, கடந்த 26-ந்தேதி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அன்றைய தினம் கருப்பை நீக்கப்பட்டு, சிறுகுடல் மற்றும் சிறுநீர்ப்பையிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அப்பெண் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதற்கிடையே கடந்த 15ந்தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மற்றும் குழுவினர் உதவியுடன் விசாரணை நடத்தியதில் ராஜி போலி டாக்டர் என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜிவை கைது செய்தனர்.
