திருச்சியில் பாரம் சுமக்கும் தொழிலாளா்கள் காத்திருக்கும் போராட்டம்:

0
1

திருச்சியில் பாரம் சுமக்கும் தொழிலாளா்கள் காத்திருக்கும் போராட்டம்:

தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளா்கள் காத்திருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனா்.நெல் மூட்டைகளை ரயில்வே வேகன் மூலம் ஏற்றி, அனுப்ப நடவடிக்கை எடுத்து திருச்சி ரயில்வே குட்ஷெட் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தப்படுகிறது.கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின் தொழிலாளா்களின் வாழ்வாதாரமானது, வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், திருச்சி நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சங்க செயலா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.மாா்க்சிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ராமா், குட்ஷெட் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் சேகா்ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கினா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

3

Leave A Reply

Your email address will not be published.