திருச்சியில் கரோனா அபராதம் ரூ.12 லட்சம் வசூல்:

0
Business trichy

திருச்சியில் கரோனா அபராதம் ரூ.12 லட்சம் வசூல்:

திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது வெளியில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் உள்ள நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை ஜூன் 4-ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது.

web designer

இதற்காக, மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநகரின் 4 கோட்டங்களிலும் சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

loan point

திருச்சியில் ஏப்ரல் முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 771 மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 507 என்று மொத்தம் ரூ.11,97,278 வசூலிக்கப்பட்டுள்ளது.

 

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.