முனைவர் கே. மீனா( முன்னோடி முதல்வர்)

திருச்சியின் அடையாளங்கள்

0

1984-ஆம் ஆண்டில் பெண்களுக்கான பிரத்யேக கல்லூரிகள் பிரபலமடையாத காலம். அத்தகைய காலக்கட்டத்தில் பெண் கல்விக்கென்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ஆரால் அனுமதியளிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி தான் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி. திருச்சி தேசிய கல்லூரி நிர்வாக குழுவின் செயலர் சந்தானம், பெண்களின் உயர்கல்விக்காக ஒரு தனிப்பட்ட கல்லூரியை தொடங்க விரும்பி விண்ணப்பித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உதவியுடன் 15.10.1984ல் இக்கல்லூரியை தொடங்கினார். அனைத்து துறைகளிலும் இக்கல்லூரி கண்டுள்ள சாதனை உண்மையில் வியக்கத்தக்கது. இக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய கே. மீனா வெற்றி பெற துடிக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு எடுத்துக் காட்டாய் திகழ்ந்தவர்.

நவீன கல்வியாகிய தகவல் தொழில்நுட்பம், மற்றும் கணினி துறையில் கால் பதித்தவர். மனவளம் குன்றிய மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கென தனியாக மென்பொருளைக் கண்டறிந்தவர். சிறந்த சமூக சேவகி. இவர் இயற்பியல் முதுகலை, கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

வகித்த பதவிகள்:
பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர், இந்திராகாந்தி கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக மட்டுமின்றி, இன்டர்நெட் உபயோகிப்பாளர் சங்க தலைவர், ரயில்வே கன்சல்ட்டேட்டிங் ஆலோசனைக்குழு உறுப்பினர், திருச்சி வானொலி நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்.

சாதனைகள்:
திருச்சிமாவட்ட சுற்றுலா வரைபடம் அடங்கிய குறுந்தகடு மென்பொருள், மனவளம் குன்றிய சிறுவர்களின் மொழி அறிவினை மதிப்பீடு செய்யும் மென்பொருள், காது கேளாத சிறுவர் சிறுமியரின் மொழி அறிவின் தரம் மற்றும் மன வளர்ச்சியை நிர்ணயிக்க மென்பொருள், 1999ல் ஊனமுற்றோரின் ஒருங்கிணைந்த கல்வி முறையின் விவரங்களைப் பற்றிய மென்பொருள், செவிப்புலன் இழப்புப் பற்றிய புள்ளியல் விபரம் பற்றிய மென்பொருள், பச்சிளம் குழந்தைகளின் குறைந்த கணக்கீட்டு திறனை அதிகரிக்க மென்பொருள் என பல மென்பொருள்களை உருவாக்கியுள்ளார்.

2000-இல் சிறந்த ஆசிரியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. திறமைமிகு முதல்வர் என சென்னை கல்வி அறக்கட்டளையால் வழங்கப்பட்ட விருது. இந்தியாவின் சர்வதேச உயிர்வரைபட ஆய்வு நிறுவனத்தால் தலைசிறந்த பெண்மணிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இளம் பெண் விஞ்ஞானி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

மறக்க முடியாத நிகழ்வுகள்:
கிராமப்புற மகளிர்களுக்கு கணினி மற்றும் கைத்தொழில்கள் கற்றுக் கொடுத்தது. குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டியது.

Leave A Reply

Your email address will not be published.