(15.09.2020) இன்று பிளஸ் 1 மறுகூட்டல் மதிப்பீடு முடிவு வெளியாகிறது:

0
1

(15.09.2020) இன்று பிளஸ் 1 மறுகூட்டல் மதிப்பீடு முடிவு வெளியாகிறது:

பிளஸ்1 தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இன்று (15.09.2020) முடிவுகள் வெளியாகிறது.  மார்ச்  மாதம் பிளஸ்1 தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் சந்தேகம் இருப்பவர்கள்  விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் பல மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

அதில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் மட்டும் இன்று (15.09.2020) வெளியிடப்படுகிறது. மேற்கண்ட மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு  விண்ணப்பித்து இருந்தவர்கள் www.dgo.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று பிற்பகல் முதல் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் விடைத்தாளில் எந்த மாற்றமும் இல்லை. மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள  மாணவ மாணவியர் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான  திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.